ஜூன் மாதத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப் போகுது
வேத ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறும்போது, அது மனித வாழ்க்கையை பாதிக்கிறது.ஒரு நபரின் வாழ்க்கையில் கிரகங்களின் நிலை சுப மற்றும் அசுபமான பலன்களை தரும்.
ஜூன் மாதம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கப்போகிறது. பொதுவாக வேத ஜோதிடத்தில் கிரகங்களின் மாற்றம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றம் 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலகளையும் தரும். ஜோதிடக் கணக்கீடுகளின்படி, ஜூன் மாதத்தில், சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். அந்த வகையில் லட்சுமி தேவியின் அருளால் ஜூன் மாதம் யாருக்கு உகந்ததாக இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் விரிவாக்கம், இடம் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
வருமானம் அதிகரிக்கும்.
நண்பர்களின் உதவியால் பண வரவு உண்டாகும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மதம் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும்.
புதிய வேலையைத் தொடங்க இதுவே நல்ல நேரம்.
மேலும் படிக்க | மே மாததின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு அறிவுசார் நடவடிக்கைகள் வருமான ஆதாரமாக மாறும்.
கோபத்தின் உக்கிரம் குறையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
நண்பரின் உதவியால் வியாபாரம் வேகமெடுக்கும்.
புதிய வியாபாரத்திற்கான சில திட்டங்கள் நிறைவேறும்.
வேலையில் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஜூன் மாதம் முழுவதும் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள்.
தொழில் நிலை மேம்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.
குடும்பத்தில் சமய காரியங்கள் நடைபெறலாம்.
உங்களுக்கு மரியாதை கிடைக்கும்.
ஆடைகளை பரிசாகப் பெறலாம்.
நீண்ட பயணங்கள் மேற்கொள்ளப்படும். பயணம் வெற்றியடையும்.
மீனம்
மீனா ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.
பணமும் லாபமும் அதிகரிக்கும், இதன் காரணமாக நிதி நிலை பக்கம் வலுவாக இருக்கும்.
தந்தையின் உதவியால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
படிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
உயர் அதிகாரிகளுடன் சுமுகமான உறவைப் பேணவும்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
ஜூன் மாதம் 5 கிரகங்களின் ராசி மாற்றம்
* ஜூன் இரண்டாம் தேதி செவ்வாய் தனது ராசியை மாற்றுகிறார். அப்போது செவ்வாய் கிரகம் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு செல்ல உள்ளார்.
* ஜூன் 3 ஆம் தேதி புதன் கிரகம் பின்னோக்கி நகர்வார். ஜூன் 3 ஆம் தேதி, புதன் கிரகம் ரிஷப ராசியில் வக்கிரமாவார். எந்த ஒரு கிரகமும் வக்கிரமாகும் போது, அது நேராக நகராமல் பின்னோக்கி செல்லும்.
* ஜூன் 5 முதல், சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் பின்னோக்கி நகர்வார்.
* ஜூன் 15 ஆம் தேதி, கிரகங்களின் அரசனான சூரியன் பெயர்ச்சியாகப் போகிறது.
* ஜூன் 20 ஆம் தேதி, வியாழன் அதாவது குரு பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி நகர்வார்.
* அதேபோல் சுக்கிரன் ஜூன் 22 அன்று கடக ராசியில் பெயர்ச்சியாக உள்ளார். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்குள் சுக்கிரன் பிரவேசிப்பார்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )
மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR