Driving License New Rules: ஓட்டுநர் உரிமம் புதிய விதிகளின் படி, இப்போது நீங்கள் ஓட்டுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) செல்ல வேண்டியதில்லை. ஓட்டுநர் உரிமத்திற்கான விதிகளை மாற்றுவதன் மூலம் மத்திய அரசு அதை மிகவும் எளிதாக்கியுள்ளது. அரசாங்கத்தின் இந்தப் புதிய விதிகளின் முழு விபரம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓட்டுநர் தேர்வு இனி தேவையில்லை


ஓட்டுநர் உரிமத்திற்கான விதிகளை அரசு திருத்தியுள்ளது. புதிய விதியின் படி, இப்போது நீங்கள் ஆர்டிஓவுக்குச் சென்று ஓட்டுநருக்கான எந்த ஒரு தேர்வையும் கொடுக்கத் தேவையில்லை. இந்த விதிகளை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த விதிகள் ஜூலை மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த புதிய மாற்றத்தின் மூலம், ஆர்டிஓவின் ஓட்டுநர் உரிமத்திற்காக காத்திருக்கும் கோடிக்கணக்கான மக்கள் பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.


அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பள்ளிக்கு சென்று பயிற்சி 


ஓட்டுநர் உரிமம் (Driving License) பெற ஆர்டிஓ -வில் தங்கள் தேர்வுக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இதனை அறிவித்துள்ளது. நீங்கள் ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் ஓட்டுநர் உரிமத்திற்காக தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் இருந்து பயிற்சி எடுத்து அங்கு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும், விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் மையம் அல்லது நிறுவனம் சான்றிதழ் வழங்கும். இந்த சான்றிதழின் அடிப்படையில், விண்ணப்பதாரருக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.


ALSO READ | இந்த ‘1’ ரூபாய் காயின் இருந்தால், ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகலாம்..!!


புதிய விதிகள் 


ஓட்டிநர் பயிற்சி மையங்கள் தொடர்பாக சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம், சில வழிகாட்டுதல்களையும் நிபந்தனைகளையும் வெளியிட்டுள்ளன. 


1. அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம், இரு சக்கர வாகனம், முச்சக்கர வண்டி மற்றும் இலகு ரக மோட்டார் வாகனங்களுக்கான பயிற்சி மையங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் நிலம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும், நடுத்தர மற்றும் கனர வாகனங்களுக்கான ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்.


2. பயிற்சியாளர் குறைந்தது 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பதோடு, குறைந்தது ஐந்து வருட ஓட்டுநர் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், போக்குவரத்து விதிகளை நன்கு அறிந்திருக்க வேண்டும்.


3. கற்பித்தல் பாடத்திட்டத்தையும் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இலகுரக மோட்டார் வாகனங்களை ஓட்டுவதற்கு, பாட திட்டத்தின் காலம் அதிகபட்சம் 4 வாரங்கள் அதாவது 29 மணிநேரம் வரை. இந்த ஓட்டுநர் மையங்களின் பாடத்திட்டம் 2 பகுதிகளாக பிரிக்கப்படும். கோட்பாடு மற்றும் நடைமுறை தேர்வு.


4. மக்கள் பொதுவாக பயன்படுத்தும் சாலைகள், கிராமப்புற சாலைகள், நெடுஞ்சாலைகள், நகர சாலைகள், ரிவர்ஸில் செல்தல் மற்றும் பார்க்கிங், மேடு மற்றும் பள்ளங்களில் வாகனம் ஓட்டுதல் போன்றவற்றில் 21 மணிநேரம் ஓட்ட கற்றுக்கொள்ள வேண்டும். தியரி பகுதி பாட திட்டத்தில் 8 மணிநேர கற்பித்தலை உள்ளடக்கியது. இதில் சாலை விதிகள், போக்குவரத்து விதிகள், போக்குவரத்து கல்வி, விபத்துகளுக்கான காரணங்களை புரிந்துகொள்வது, முதலுதவி மற்றும் எரிபொருள் செயல்திறன் குறித்த கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியது.


ALSO READ | Old is Gold: இந்த ‘25’ பைசா உங்களிடம் இருந்தால், ₹1.5 லட்சம் ரூபாய் கிடைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR