பிபிஎஃப் vs மியூசுவல் ஃபண்ட்ஸ்: பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) ஒரு நீண்ட கால முதலீட்டு வழிமுறையாகும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் நீண்ட காலத்திற்கான முதலீட்டு முறைகளாகும். இருப்பினும், பிபிஎஃப் முற்றிலும் கடன்-செயல்முறையாகவும் ஆபத்து இல்லாத முதலீட்டு விருப்பமாகவும் உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில் தேசிய ஓய்வூதிய அமைப்பான நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது (மார்கெட் லிங்க்ட்). ஆகையால், என்பிஎஸ் திட்டம் 100 சதவீதம் ஆபத்து இல்லாத முறை அல்ல. நிபுணர்களின் கூற்றுப்படி, ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறன் குறைவாக இருந்தால், அவரது பணத்தை செபாசிட் செய்ய பிபிஎஃப் சிறந்ததாக இருக்கும். 



எனினும் ரிஸ்க் எடுக்க தயாராக இருக்கும் முதலீட்டாளர்கள் என்பிஎஸ் மிகவும் சரியான முதலீட்டு ஆப்ஷனாக இருக்கும். 


மேலும் படிக்க | Post Office FD: அதிக வருமானம் கொடுக்கும் அஞ்சலக FD திட்டம் 


பிபிஎஃப் vs மியூசுவல் ஃபண்ட்ஸ்: பெரும் குழப்பம்


பிபிஃப் மற்றும் என்பிஎஸ் இரண்டும் தன்னார்வ பங்களிப்பு விருப்பங்களாகும். பிபிஎஃப் அல்லது என்பிஎஸ் ஆகிய இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​எது அதிகமான வருமான வரி விலக்கு அளிக்கும் என்று மக்கள் குழப்பமடைகின்றனர். பொதுவாக, பிரிவு 80C இன் கீழ் அவர்களின் பிபிஎஃப் வரம்பு ரூ.1.5 லட்சத்தை தாண்டும்போது மக்கள் என்பிஎஸ்-ல் முதலீடு செய்கிறார்கள். 


பிபிஎஃப் vs ஈக்விட்டி: வருமான ஒப்பீடு 


என்பிஎஸ் கணக்கில் ஈக்விட்டி வெளிப்பாடு காரணமாக, ஒரு முதலீட்டாளர் ஈக்விட்டி மற்றும் கடன் விருப்பங்களின் 50:50 விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், நீண்ட கால அடிப்படையில் கடன் விருப்பத்தில் சுமார் 8 சதவிகித வருமானமும், ஈக்விட்டி வெளிப்பாட்டில் சுமார் 12 சதவீத வருமானமும் கிடைக்கும். ஆகையால், கடன்-ஈக்விட்டி விகிதத்தில் நீண்ட காலத்திற்கு நிகர என்பிஎஸ் வட்டி விகிதம் சுமார் 10 சதவீதமாக இருக்கும்.


ஆகவே, பிபிஎஃப் வட்டி விகிதம் 7.1 சதவீதமாக இருக்கும் நேரத்தில், முதலீட்டாளர் கடன் மற்றும் ஈக்விட்டி என்பிஎஸ் கணக்கில் 50:50 விகிதத்தைத் தேர்வுசெய்தால், என்பிஎஸ் வட்டி விகிதம் சுமார் 2.9 சதவீதம் அதிகமாக இருக்கும்.


மேலும் படிக்க | EPFO ஓய்வூதியத் திட்டம்: இனி ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்படும்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR