Ola Electric Scooter: முதல் நாள் புக்கிங்கில் அசத்தல் சாதனை, புகழ்ந்து தள்ளிய ஆனந்த் மஹிந்திரா
ஓலா எலக்ட்ரிக்கின் மின்சார-ஸ்கூட்டர் முன்பதிவில் அதற்கு கிடைத்த அபரிமிதமான புக்கிங்கிற்காக ஆனந்த் மஹிந்திரா அந்த நிறுவனத்தை பாராட்டியுள்ளார்.
மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நல்ல விஷயங்களையும் செயல்களையும் பாராட்டத் தவறுவதில்லை. இந்த முறை அவர் பாராட்டியுள்ளது ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை. ஓலா எலக்ட்ரிக்கின் மின்சார-ஸ்கூட்டர் முன்பதிவில் அதற்கு கிடைத்த அபரிமிதமான புக்கிங்கிற்காக ஆனந்த் மஹிந்திரா அந்த நிறுவனத்தை பாராட்டியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா (Anand Mahindra) ட்வீட் செய்து, “துணிச்சலுக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் பண்புக்கும் உந்துதல் கிடைப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. @bhash-ஐ பின்பற்றி மேலும் தொழில்முனைவோர் அச்சப்படாமல் முன்வந்தால், இந்தியாவில் தொழில்முனைப்பும் புதுமை காணலும் கண்டிப்பாக அதிகரிக்கும்” என்று எழுதியுள்ளார். ”
தங்களது இ-ஸ்கூட்டருக்கு (Electric Scooter) முன்பதிவு தொடங்கிய ஒரே நாளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆர்டர்களை பதிவு செய்ததாக ஜூலை 17 சனிக்கிழமையன்று நிறுவனம் தெரிவித்தது. இதுபோன்ற விஷயங்களைப் பற்றி அடிக்கடி பாராட்டி ட்வீட் செய்யும் மஹிந்திரா, "அச்சமின்மை மற்றும் அபாயத்தை எதிர்கொள்ளும் பண்புகள் அங்கீகரிக்கப்படுவது மகிழ்ச்சியை அளிக்கின்றது” என்று கூறியுள்ளார்.
ALSO READ: Ola Electric Scooter சாதனை: 24 மணி நேரத்தில் 1,00,000 ஸ்கூட்டர்கள் புக் செய்யப்பட்டன
ஓலா தலைவரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வாலை ஆனந்த் மஹிந்திரா பாராட்டினார். மேலும் தொழில்முனைவோர் அகர்வாலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு பின்பற்ற வேண்டும், தோல்வியின் அச்சம் இல்லாமல் முன்னேற வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஏனெனில் இது இந்தியாவில் புதுமுறைகாணலுக்கான சூழலை வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓலாவின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், “முன்பதிவில் வாடிக்கையாளர்கள் காண்பிக்கும் இந்த ஆர்வம், மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. உலகை நிலையான இயக்கத்திற்கு மாற்றுவதற்கான எங்கள் நோக்கத்தில் இது ஒரு பெரிய படியாகும். ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்து ஈ.வி (Electric Vehicle) புரட்சியில் இணைந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன். இது ஆரம்பம் மட்டுமே!” என்று கூறியிருந்தார்.
அவர் மேலும், "இந்தியாவில் மின்சார வாகன புரட்சி அதிரடியாகத் துவங்கிவிட்டது. எங்ளிடம் தங்கள் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்த 100,000+ புரட்சியாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி.” என்று கூறியிருந்தார்.
ஓலா ஸ்கூட்டர், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஒரு புரட்சிகர தயாரிப்பு ஆகும். இது கிளாஸ் -லீடிங் வேகம், முன்னோடியில்லாத வரம்பு, மிகப்பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய மிகச் சிறந்த ஸ்கூட்டராக்குகிறது. இதை அனைவரும் வாங்கும் விதத்தில் இதன் விலையும் புரட்சிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் நாட்களில் ஓலா தன் ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்களை வெளியிடும் என்று ஓலாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ: Ola Electric Scooter முன்பதிவு தொடங்கியது: ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR