புதுடெல்லி: நீங்கள் ஒரு வாகனத்தை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கத்தின் Fame 2 கொள்கை அமல்படுத்தப்பட்ட பிறகு, மின்சார வாகனம் வாங்குவோருக்கு அரசாங்க மானியம் கிடைக்கும்.
இதுவரை இந்த மானியம் குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி (Delhi) மற்றும் தெலுங்கானாவில் கிடைத்துக்கொண்டு இருந்தது. ஆனால் இப்போது இந்த புதிய கொள்கை ராஜஸ்தானிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இப்போது இங்குள்ள மாநில அரசு மின்சார வாகனங்களை வாங்குபவர்களுக்கு நேரடி மானியத்தை அளிக்கும். விரைவில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் மினசார வாகனங்களுக்கான மானியம் வழங்கப்படும் என நம்பப்படுகின்றது.
எவ்வளவு மானியம் கிடைக்கும்
ராஜஸ்தான் போக்குவரத்துத் துறையின்படி (Electric Vehicles Subsidy Update), மின்சார வாகனங்கள் (Electric Vehicle) வாங்குவோருக்கு அரசாங்கம் எஸ்ஜிஎஸ்டி தொகையை திருப்பிச் செலுத்தும். இதன் கீழ், அனைத்து மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உட்பட நான்கு சக்கர வாகனங்களின் பேட்டரி சக்திக்கு ஏற்ப ஒரு முறை மானியம் வழங்கப்படும்.
ALSO READ: Revolt RV 400: ரூ. 35 ஆயிரம் வரை மானியம் - வெறும் 9 ரூபாயில் 100 கி.மீ பயணிக்கலாம்
இந்த தொகை 2021 ஏப்ரல் 1 முதல் 2022 மார்ச் 31 வரை வாங்கப்பட்ட மற்றும் மார்ச் 2022 இல் பதிவு செய்யப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் வழங்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
பேட்டரி பேக்கிற்கு ஏற்ப மானியம் வழங்கப்படும்
ராஜஸ்தான் போக்குவரத்துத் துறையின்படி, மின்சார வாகனம் வாங்குவதற்கான மிகக் குறைந்த மானியம் ரூ .5 ஆயிரம் ஆகும். இது 2 கிலோவாட் வரையிலான இரு சக்கர வாகனங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில், 5 கிலோவாட் வரையிலான வாகனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும். இந்த வழியில் வாகனம் வாங்குவோருக்கு அரசாங்கத்திடமிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
டெல்லியில் அதிகபட்ச மானியம் கிடைக்கிறது
டெல்லியில் உள்ள மின்சார வாகனங்கள் நாடு முழுவதிலும் மிக அதிக மானியத்தைப் பெறுகின்றன. இந்த மானியத்தில், நீங்கள் 1 லட்சம் 50 ஆயிரம் ரூபாய் வரை பயனடையலாம். டெல்லியில் வசிப்பவர்கள் மின்சார வாகனங்களை வாங்கினால், மிக அதிக அளவில் பயனடையலாம்.
தமிழகத்திலும் மின்சார வாகன மானியம் மிக விரையில் செயலில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. உலகின் மிகப்பெரிய இரு சக்கர மின்சார வாகன உற்பத்தியாளரான ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) தொழிற்சாலையின் பணிகள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. ஓலா ஸ்கூட்டரின் முன்பதிவும் துவங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Top 5 Budget cars: ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் அசத்தலான கார்களின் பட்டியல் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR