Ola Electric Scooter சாதனை: 24 மணி நேரத்தில் 1,00,000 ஸ்கூட்டர்கள் புக் செய்யப்பட்டன

ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கிய முதல் 24 மணி நேரத்தில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்கூட்டருக்கான முன்பதிவை செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓலா மின்சார ஸ்கூட்டர், உலக அளவில் மிக அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டராகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 17, 2021, 05:15 PM IST
  • 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான ஓலா மின்சார ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு நடந்துள்ளது.
  • வரும் நாட்களில் ஓலா தன் ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்களை வெளியிடும்.
  • ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்து ஈ.வி புரட்சியில் இணைந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி-ஓலா நிறுவனம்.
Ola Electric Scooter சாதனை: 24 மணி நேரத்தில் 1,00,000 ஸ்கூட்டர்கள் புக் செய்யப்பட்டன  title=

மின்சார வாகன பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் ஓலா மின்சார ஸ்கூட்டர் விரைவில் வாடிக்கையாளர்களை சென்றடையவுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவும் துவங்கிவிட்டது.

ஓலா மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவு துவங்கிய முதல் 24 மணி நேரத்தில், 1 லட்சத்திற்கும் அதிகமானோர் ஸ்கூட்டருக்கான முன்பதிவை செய்துள்ளதாக நிறுவனம் இன்று (சனிக்கிழமை) தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஓலா மின்சார ஸ்கூட்டர், உலக அளவில் மிக அதிகமாக முன்பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டராகி உள்ளது.

ஓலா எலக்ட்ரிக் தனது மின்சார ஸ்கூட்டருக்கான  (Ola Electric Scooter) முன்பதிவை ஜூலை 15 ஆம் தேதி மாலை துவக்கியது. மின்சார வாகன சந்தையை கலக்கவுள்ள இந்த ஓலா ஸ்கூட்டரை olaelectric.com மூலம் ரூ.499-க்கு முன்பதிவு செய்யலாம். ஓலா மின்சார ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய, தாங்களே எதிர்பாராத அளவு வாடிக்கையாளர்களின் டிமாண்ட் அதிகமாக உள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்கூட்டரை முன்பதிவு செய்ய தொடர்ந்து மக்கள் நிறுவனத்தின் வலைத்தளத்தை பார்வையிட்டு வருகின்றனர் என்று நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

ஓலாவின் தலைவரும்  தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், “முன்பதிவில் வாடிக்கையாளர்கள் காண்பிக்கும் இந்த ஆர்வம், மக்கள் மத்தியில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. உலகை நிலையான இயக்கத்திற்கு மாற்றுவதற்கான எங்கள் நோக்கத்தில் இது ஒரு பெரிய படியாகும். ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்து ஈ.வி (Electric Vehicle) புரட்சியில் இணைந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நன்றி கூறுகிறேன். இது ஆரம்பம் மட்டுமே!” என்று கூறியுள்ளர்.

ஓலா ஸ்கூட்டர், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஒரு புரட்சிகர தயாரிப்பு ஆகும். இது கிளாஸ் -லீடிங் வேகம், முன்னோடியில்லாத வரம்பு, மிகப்பெரிய பூட் ஸ்பேஸ் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த அம்சங்கள் இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் வாங்கக்கூடிய மிகச் சிறந்த ஸ்கூட்டராக்குகிறது. இதை அனைவரும் வாங்கும் விதத்தில் இதன் விலையும் புரட்சிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் நாட்களில் ஓலா தன் ஸ்கூட்டரின் அம்சங்கள் மற்றும் விலை பற்றிய விவரங்களை வெளியிடும் என்று ஓலாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்களும் ஓலா (Ola) எலக்ட்ரிக் நிறுவனத்தின் Ola Series S ஸ்கூட்டரை வாங்க முன்பதிவு செய்ய விரும்பினால், கீழே அளிக்கபட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

ALSO READ: Ola Electric Scooter: அட்டகாசமான டீசர் ரிலீஸ், சாலைகளில் பறக்கும் ஓலா ஸ்கூட்டர்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு: ஓலா சீரிஸ் எஸ்-ஐ முன்பதிவு செய்ய பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

1. olaelectric.com இல் உள்நுழைந்து, 'ரூ 499 க்கு ரிசர்வ்' (Reserve for Rs 499) பொத்தானைக் கிளிக் செய்யவும். 

2. உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு, கேப்ட்சா சரிபார்ப்பு பெட்டியை டிக் செய்து, 'Next’ -ஐ கிளிக் செய்யவும். 

3. உங்கள் மொபைல் எண்ணில் நீங்கள் பெற்ற OTP ஐ உள்ளிட்டு 'Next’ -ஐ கிளிக் செய்யவும்.

4. புதிதாக திறக்கும் டயலாக் பாக்சில்  ‘Total Payable – Rs 499’ பெட்டி டெபிட் / கிரெடிட் கார்டு, யுபிஐ மற்றும் நெட்பேங்கிங் ஆகிய மூன்று கட்டண விருப்பங்கள் காணப்படும். 

5. உங்களுக்கு வசதியான கட்டண ஆப்ஷனைத் தேர்வு செய்த பின்னர் கட்டணம் செலுத்தும் பேமெண்ட் கேட்வேக்கு அனுப்பப்படுவீர்கள். 

6. கட்டணம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டவுடன், வாடிக்கையாளர்கள் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் வழியாக மொபைல் எண் மற்றும் வழங்கப்பட்ட மின்னஞ்சல் முகவரியில் ஆர்டர் ஐடி மற்றும் பிற விவரங்களை  பெறுவார்கள்.

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முன்பதிவு: பணத்தைத் திரும்பப் பெறும் செயல்முறை 

முன்பதிவு செய்தபின் ஸ்கூட்டரை வாங்கும் முடிவில் வாடிக்கையாளர்களுக்கு மனம் மாறினால், அவர்கள் ஆர்டரை ரத்து செய்யலாம். அந்த நிலையில், முன்பதிவு தொகை முழுமையாக திருப்பித் தரப்படும். ஏழு முதல் பத்து வேலை நாட்களுக்குள் வாடிக்கையாளர் கட்டணம் செலுத்திய அதே முறையில் தொகை திருப்பி செலுத்தப்படும்.

வாடிக்கையாளர் விரும்பினால், அவர் தனது முன்பதிவை வேறொருவர் பெயரிலும் மாற்றலாம். இதற்கு  support@olaelectric.com என்ற மின்னஞ்சல் கோரிக்கையை அனுப்ப வேண்டும்.

ALSO READ: Ola Electric Scooter முன்பதிவு தொடங்கியது: ரூ.499-க்கு முன்பதிவு செய்யும் முறை இதோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News