பழைய ஓய்வூதியத் திட்டம்: நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய சர்ச்சை மீண்டும் தொடங்கியுள்ளத்து. சில மாநிலங்கள் இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதே இதற்குக் காரணமாகும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பழைய ஓய்வூதியத் திட்டம்: இந்த மாநில ஊழியர்களுக்கு நல்ல செய்தி


சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. ஹோலி பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து அரசு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டம்: அறிவிப்பை வெளியிட்டது அரசு


சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், பட்ஜெட் தாக்கலின் போது, ​​மாநில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதாக அறிவித்தார். இது தவிர, நீதி மற்றும் நிதிப் பாதுகாப்பை வழங்கும் வகையில், ராஜீவ் காந்தி கிராமின் கிரிஷி பூமிலெஸ் மஸ்தூர் நியாய் யோஜனா திட்டத்தின் கீழ் வரும் ஆண்டு முதல் ஆண்டு உதவித் தொகையை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆக உயர்த்தியும் முதல்வர் அறிவிப்பை வெளியிடார். 


மேலும் படிக்க | OPS vs NPS: பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள நன்மைகள் என்ன, விவரம் இதோ 


இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். பட்ஜெட்டை சமர்ப்பித்த முதல்வர், கவுடான்ஸ் மகாத்மா காந்தி கிராமப்புற தொழில் பூங்காவாக மேம்படுத்தப்படும் என்றார். இந்த தொழில் பூங்காக்களில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த பட்ஜெட்டில் 600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பழைய ஓய்வூதியத் திட்டம்: மத்திய அரசும் அறிவிக்கக்கூடும்


மத்திய அரசும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை விரைவில் அமல்படுத்த பல அறிவிப்புகளை வெளியிடக்கூடும். பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) பலனை மத்திய ஊழியர்கள் விரைவில் பெறுவார்கள். இது குறித்து நீண்ட நாட்களாக ஊழியர்கள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். ஊழியர்களின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு (பழைய ஓய்வூதியத் திட்டம்) சட்ட அமைச்சகத்தின் கருத்தையும் மத்திய அரசு கேட்டுள்ளது. இப்போது அமைச்சகத்தின் பதிலுக்காக ஊழியர்கள் காத்திருக்கிறார்கள்.


பழைய ஓய்வூதியத் திட்டம்: அரசு எப்போது முடிவெடுக்கும்? 


மத்திய அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவது பற்றி பரிசீலித்து வருகிறது. டிசம்பர் 31, 2003 அன்று அல்லது அதற்கு முன் ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் வெளியிடப்பட்ட அரசு ஊழியர்களுக்கு இந்தப் பலன் கிடைக்கும். இது குறித்து சட்ட அமைச்சகத்தின் பதிலுக்குப் பிறகு முடிவு எடுக்கப்படும் என, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க | EPFO முக்கிய செய்தி: இபிஎஃப்ஒ-விலிருந்து இபிஎஃப்ஓ டிரஸ்டுக்கு கணக்கை மாற்றுவது எப்படி? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR