தந்தை மற்றும் மகனுக்கு இடையிலான உறவு என்பது ஒரு புனிதமான பந்தம். தந்தை ஒரு காவலன், ஆசிரியர், மற்றும் நண்பன் போன்று மகனுக்கு பல பரிமாணங்கள் அவருக்கு உண்டு. அவர் மகனுக்கு வாழ்க்கையின் பாடங்களை கற்பிக்கிறார். அவனை சவால்களை சந்திக்க ஊக்குவிக்கிறார், மற்றும் அவன் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள உதவுகிறார். மகன் தந்தையின் அறிவுரைகளை மதிப்பதோடு, அவரது அன்பையும், பாசத்தையும் பெறும் போது, இந்த உறவு ஒரு மகனின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது, அவனை ஒரு சிறந்த மனிதனாக மாற்றுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தந்தை ஒரு மகனின் வாழ்வில் அவனது முதல் ஹீரோ, முதல் குரு, மற்றும் முதல் நண்பன் போன்ற நிலைகளை வகிக்கிறார். மேலும், இந்த உறவு தந்தைக்கும் ஒரு புதிய பார்வையை அளிக்கிறது. அவர் மகனின் மூலம் தனது இளமையை மறுபடியும் அனுபவிக்கிறார்.  தந்தையின் அபும் வழிகாட்டுதலும், மகன் / மகளை ஒரு சிறந்த மனிதனாக மாற்றுகிறது. இந்த உறவு தந்தைக்கும் ஒரு புதிய பார்வையை அளிக்கிறது, அவர் மகனின் மூலம் தனது இளமையை மறுபடியும் அனுபவிக்கிறார்.


குழந்தை வளர்ப்பின் போது, ​​தாய் மற்றும் தந்தை இருவரின் பங்கும் முக்கியமானது தான்,.பொதுவாக குழந்தைகள் தங்கள் தாயுடன் அதிக நேரத்தை செலவிடுவதைக் காணலாம்.  எனவே, அவர்கள் குழந்தைகளுடன் அதிகம் நெருகக்மாக இருப்பதை உணர்கிறார்கள். அதே நேரத்தில், அடிக்கடி வேலை நிமித்தமாக விலகி இருக்கும் தந்தைகள்  தங்கள் குழந்தைகளுடன் கண்டிப்பாக நடந்துகொள்கிறார்கள்.


மேலும் படிக்க | உங்கள் கணவருடன் சண்டைக்கு பின் இந்த 4 விஷயங்களை மட்டும் செய்ய வேண்டாம்!


ஒரு தந்தையாக, நீங்களும் உங்கள் குழந்தையுடனான உங்கள் பிணைப்பை வலுப்படுத்த விரும்பினால், சில விஷயங்களை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.  உங்கள் குழந்தையுடன் உங்கள் உறவை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் நீங்கள் செய்ய வேண்டியவை:


குழந்தையுடன் நேரத்தை செலவிடுங்கள்


தாயை ஒப்பிடும் போது தந்தைகளுக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஆன தொடர்பு குறைவாகவே உள்ளது . விடுமுறை நாட்களில் கூட, குழந்தைகள் பெரும்பாலும் தங்கள் நண்பர்களுடன் விளையாடி நேரத்தை செலவிடுகிறார்கள், தனது தந்தையுடன் குறைந்த நேரத்தை செலவிடுகிறார்கள். இது தகவல் தொடர்பு இடைவெளியை அதிகரிக்கலாம். எனவே, தந்தை முடிந்தவரை குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிட முயற்சிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மட்டுமல்ல, குழந்தைக்காக தினமும் சிறிது நேரம் ஒதுக்குங்கள், அவர்களுடன் விளையாடுங்கள், வீட்டுப்பாடங்களில் உதவுங்கள். இதன் மூலம், உங்கள் குழந்தையும் உங்களுடன் நேரத்தை செலவழிக்கும்.


குழந்தைகளுடன் தரமான நேரத்தை செலவிடுங்கள். இதற்காக அருகில் உள்ள பூங்காக்கள், உயிரியல் பூங்கா, நூலகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். இதன் மூலம், நீங்களும் குழந்தையும் ஒன்றாக தரமான நேரத்தை செலவிடுவது மட்டுமல்லாமல், உங்கள் இருவரின் மகன்/மகள்-தந்தை பிணைப்பையும் மேம்படுத்துகிறது.


குழந்தையின் அன்றாட வேலைகளில் உதவுங்கள்


உங்கள் குழந்தையுடனான உறவை வலுப்படுத்த, உங்கள் குழந்தைக்கு தினசரி பணிகளில் உதவலாம். குழந்தை பல் துலக்க , பள்ளி பையை பேக் செய்ய உதவுங்கள். அதேபோல், காலை உணவை சாப்பிட வைக்க, தாய்க்கு பதிலாக தந்தை குழந்தையுடன் உட்காரலாம்.


குழந்தையுடன் நட்பு கொள்ளுங்கள்


பொதுவாக இந்திய வீடுகளில், தாய் அன்பான மற்றும் பாசமுள்ள ஆளுமையாகவும், தந்தையை கண்டிப்பை காட்டும் ஆளுமையாகவும்  பார்க்கப்படுவார்கள். குழந்தையிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் அதே சமயத்தில், அவர்களிடம் அன்பாக விளக்கி பேசுங்கள். குழந்தையுடன் நட்பு கொள்ளுங்கள், அவருடைய உணர்வுகளை புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.


மேலும் படிக்க | வாழ்க்கை சொர்க்கமாக இருக்க... திருமணத்திற்கு முன் கேட்க வேண்டிய சில கேள்விகள்..!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ