"எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்ற பிரபலமான பாடல் உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் பூமியில் பிறக்கும் போது நல்லவர்களாக தான் பிறக்கிறார்கள். அவர்களின் பெற்றோர் மற்றும் வளரும் சூழ்நிலைக்கேற்ப அவர்களது வாழ்க்கை மாறுகிறது. குறிப்பாக அவர்களின் குடும்பம் தான் இதில் பெரும் பங்கு வகிக்கிறது. பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்த்தாலும் அவர்களுக்கு தெரியாமலேயே சில கெட்ட பழக்கங்களை சொல்லி கொடுத்துவிடுகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளுடன் வெளிப்படையாக பேச வேண்டும், அப்போதுதான் இருவருக்கும் இடையில் உள்ள உறவு வலுப்படும். இதன் மூலம் அவர்கள் தவறான வழியில் சென்றாலும், உங்களால் திருத்த முடியும். இருப்பினும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசக்கூடாத சில விஷயங்கள் உள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குழந்தையை பராமரிக்கும் போது இந்த சின்ன சின்ன விஷயங்களை மறக்க வேண்டாம்!


பெற்றோர்கள் பேச கூட விஷயங்கள்


ஒரு பெற்றோராக நீங்கள் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் அவற்றை உங்கள் குழந்தைகளிடம் தெரிவிக்க கூடாது. பொதுவாக எந்த ஒரு பிரச்சனையையும் புரிந்து கொள்ளும் பக்குவம் மற்றும் திறன் குழந்தைகளுக்கு  இருக்காது. எனவே அவர்களது புரியாத விஷயங்களை அவர்களிடம் பேசுவது எந்த விதத்திலும் உதவாது, மேலும் அவர்களுக்கு கவலை உணர்வை அதிகரிக்க செய்யலாம்.


மற்றவர்கள் செய்யும் தவறை உங்கள் குழந்தைகளிடம் எடுத்து சொல்வது தப்பில்லை. அதே சமயம் ஒருவரை தவறான முறையில் உங்கள் குழந்தைகள் முன்பு விமர்சம் செய்ய வேண்டாம். ஒருவரை அவமதிக்கும்படி பேசுவதை தவிர்ப்பது நல்லது. நீங்கள் இதை தவறுதலாக செய்தால் கூட, உங்கள் குழந்தை உங்களை பார்த்து இதையெல்லாம் கற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது. எனவே குழந்தைகளின் முன்பு ஜாக்கிரதையாக பேசுவது நல்லது.


உங்கள் குழந்தைகள் ஏதாவது தவறு செய்தால் உடனே எல்லாவற்றிற்கும் நீ தான் காரணம் என்று திட்ட வேண்டாம். அவர்கள் செய்யும் தவறை எடுத்து சொல்லி சரி செய்ய பாருங்கள். இதன் மூலம் எதாவது பிரச்சனை என்றால் பெற்றோர்கள் உடன் இருப்பார்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளுக்கு ஏற்படும்.


எப்போதும் குழந்தைகளுடன் பேசும்போது நல்ல விசயங்களையும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விஷயங்களை பற்றியும் பேசுங்கள். குழந்தைகளின் பழக்கவழக்கங்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதனை எடுத்து சொல்லி சரி செய்யுங்கள். அவர்கள் செய்யும் நல்ல விசயங்களை பாராட்டுங்கள். அவர்களின் சிறப்பு குணங்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஆதரவு அளியுங்கள்.


ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு விஷயங்களில் ஆர்வம் இருக்கும். பெற்றோர்களை போல அவரது குழந்தைகள் இருப்பதில்லை. உங்களை போலவே அவர்களும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. அவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பு கொடுத்து, சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். அதே போல உங்கள் எதிர்பார்ப்புகளை உங்கள் குழந்தைகளின் மீது திணிக்க கூடாது. அவர்களின் ஆர்வம் எதன் மீது உள்ளது என்பதை தெரிந்து கொண்டு அதில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.


படிப்பில் கவனம் இருக்க வேண்டியது அவசியம் தான். ஒருவேளை உங்கள் குழந்தை தேர்வில் தோல்வியடைந்து இருந்தால் உடனே திட்டாமல், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வது எப்படி என்பதை சொல்லி கொடுத்து ஊக்கப்படுத்துங்கள். முக்கியமாக குழந்தைகளின் உடல் வளர்ச்சியை பற்றி எதுவும் சொல்ல வேண்டாம். சாப்பிட்டு குண்டாக மாறிவிட்டாய் போன்று சொல்ல வேண்டாம், இது அவர்களின் தன்னம்பிக்கையை பாதிக்கும்.


மேலும் படிக்க | ஆனந்த் அம்பானி weds ராதிகா மெர்ச்சன்ட்... காதல் முதல் கல்யாணம் வரை... அனைத்தும் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ