கடந்த வாரம், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பே.டி.எம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு, "உங்கள் வங்கியின் சில செயல்பாடுகள் கவலையளிப்பதாக இருப்பதாகவும், புதிய பயனர்களை ஆன்போர்டிங் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தியது.  சமீபத்தில் ப்ளூம்பெர்க் வெளியிட்ட அறிக்கையின்படி, பேமெண்ட் வங்கி சீன நிறுவனங்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டதாகவும், அவற்றிற்கு பேடியம் பேமெண்ட்ஸ் வங்கியில் மறைமுகமாகப் பங்கு உள்ளதாகவும், இது முற்றிலும் ஆர்பிஐ-ன் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது என்றும் கூறியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | ஒரு நிமிடத்தில் ஒரு லட்ச ரூபாய் கடன்! தனிநபர் கடன் வழங்கும் Google Pay


ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, நாட்டில் செயல்படும் அனைத்து பேமெண்ட் நிறுவனங்களும் டிரான்ஸாக்ஷனின் டேட்டாக்களை லோக்கல் சர்வர்களில் சேமித்து வைக்க வேண்டுமென்று அறிவுறுத்தியது.  இவ்வாறு முக்கியமான தகவல்கள் வெளியில் கசிவதை பேடியம் பேமெண்ட்ஸ் வங்கி மறுத்துள்ளது.  இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், "Bloomberg வெளியிட்ட அறிக்கை முற்றிலும் தவறானது மற்றும் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக வெளியிடப்பட்டது" என்று கூறினார்.


மேலும் அவர் கூறுகையில், பேடியம் பேமெண்ட்ஸ் வங்கி உள்நாட்டில் வளர்ந்த வங்கியாக செயல்பட்டு வருவதை நினைத்து பெருமிதம் கொள்கிறது.  மேலும் டேட்டாக்களை உள்ளூர்மயமாக்க வேண்டும் என்கிற ஆர்பிஐ-ன் வழிமுறைகளுக்கு முழுமையாக கட்டுப்படுகிறது. எங்கள் வங்கியின் அனைத்து டேட்டாக்களும் நாட்டிற்குள்ளேயே பத்திரமாக உள்ளது. அதோடு நாங்கள் டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதில் உண்மையுடன் முழுமூச்சாக செயல்பட்டு வருகிறோம் என்று கூறினார்.



சென்ட்ரல் வங்கியும் கடந்த வாரம், பேமெண்ட்ஸ் வங்கியிடம் ஐடி ஆடிட்டிங் ஒன்றை நடத்துமாறு கேட்டது.  ரிசர்வ் வங்கியின் உத்தரவுப்படி, வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-ன் பிரிவு 35A இன் கீழ், புதிய வாடிக்கையாளர்களை ஆன்போர்டிங்க் செய்வதை உடனடியாக நிறுத்துமாறு பேடியம் பேமெண்ட்ஸ் வங்கியை அறிவுறுத்தியது.  ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் எங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களை எந்த வகையிலும் பாதிக்காது, வங்கிச் சேவைகளை அவர்கள் தடையின்றி தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று பேடியம்  உறுதியளித்துள்ளது.  இந்த வங்கியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, இந்த தளம் தற்போது 300 மில்லியனுக்கும் அதிகமான வாலட்களையும், 60 மில்லியன் வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | அலர்ட்; மார்ச் மாதத்தில் 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR