இந்திய ரயில்வே என்பது, நம நாட்டின் மிக பெரிய அளவிலான நெட்வொர்க்கை கொண்டது. நாட்டின் மூலை முடுக்குகளையும் இணைக்கும் இந்த போக்குவரத்தில், தினமும் லட்சக்கணக்கானோர் பயணிக்கின்றனர். ரயில்வேயின் ஒழுங்காக டிக்கெட் எடுத்து பயணம் தான் அதிகம் என்றாலும், டிக்கெட் இல்லாமல் ஏமாற்றி பயணம் செய்பவர்களும் குறைவில்லை.  டிக்கெட் இல்லாத பயணிகள் குறித்து ரெயில்வே உயர் அதிகாரியிடம் பேசினால் அவர் அளிக்கும் தகவல்கள் சற்று அதிர்ச்சியாகவே உள்ளது. அதுவும், நாட்டிலேயே உத்திர பிரதேசம் மற்றும் பீகாரில்தான் அதிக பட்சமாக டிக்கெட் இல்லாத பயணிகள் பயணம் செய்கின்றனர் என்று கூறுவார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகாரில் டிக்கெட் இல்லாத பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்கும் பல பகுதிகள் உள்ளன. அங்கு, மக்கள் தொலைதூரத்திற்கு செல்ல வேண்டியிருக்கும் போது  மட்டுமே, ​​டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்படுகின்றன. லோக்கல் ரயிலில், சிறுது தூர பயணத்திற்கு யாரும் டிக்கெட் எடுப்பதில்லை. உ.பி-பீகாரின் சில பகுதிகளில், ரயிலில் பயணிப்பவர்கள் பொதுவாக வேடிக்கையாக கூறுவது....  'ரயிலில் போவதும் இலவசம்,  வருவதும் இலவசம், பிடிபட்டால் சாப்பாடும் இலவசம்' என்பார்கள்


உ.பி - பீகாரின் சில பகுதிகளில், ரயிலில் பயணிக்கும் உள்ளூர் பயணிகளிடமிருந்து மேலே கூறிய கோஷத்தை அடிக்கடி சொல்வார்கள். பயணத்தின் போது டிக்கெட் பரிசோதகரிடம்  சோதனையில் சிக்கினால் சிறைக்கு அனுப்பினாலும் சாப்பாடு இலவசமாக கிடைக்கும் என்று அவர்கள் வேடிக்கையாக கூறுகின்றனர்.  ஆனால், அதே உத்திரப்பிரதேசத்தில் ஒரு கிராமம் உள்ளது. அங்கு மக்கள் தங்கள் ரயில் நிலையத்தை காப்பாற்ற பயணமின்றி தினமும் டிக்கெட் வாங்குகின்றனர். ரயில்களின் நிறுத்தம் மீண்டும் தங்கள் நிலையத்தில் காணப்படும் என்ற நம்பிக்கையில். 


பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையம்


உத்திர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு ரயில் நிலையம் உள்ளது. பிரயாக்ராஜிலிருந்து ஒரு ரயில் பாதை பிரதாப்கர் சந்திப்பை நோக்கி செல்கிறது. தயாள்பூர் ரயில் நிலையம் இந்தப் பாதையில் வருகிறது. தேஜோபூர், சைதா, ரஹிஸ்பூர், மலக் பேலா, ஹர்துவா, கஹர்பூர் போன்ற கிராமங்கள் அந்த நிலையத்தைச் சுற்றி உள்ளன. தயாள்பூர் ரயில் நிலையம் முழு வீச்சில் இயங்கி இருந்த போது, ​​இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நிலையத்தில் இருந்து நகரத்திற்கு ரயில்களில் செல்வார்கள். ஆனால் இந்த நிலையம் 2005-06 ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டது.


நிலையம் மூடப்பட்ட காரணம்


ரயில் நிலையத்தை இயக்க இந்திய ரயில்வே  விதியை உருவாக்கியுள்ளது. மெயின் லைனில் ஸ்டேஷன் இருந்தால் தினமும் குறைந்தது 50 டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும் என்பது விதி. இதே போல், ரயில் நிலையம் கிளை வழித்தடத்தில் இருந்தால், ஒவ்வொரு நாளும் குறைந்தது 25 டிக்கெட்டுகள் விற்கப்பட வேண்டும். குறிப்பிட்ட அளவு டிக்கெட் விற்கப்படவில்லை என்றால் ரயில்வே நிர்வாகம் அந்த ஸ்டேஷனை மூடலாம். இந்த விதியை காரணம் காட்டி தயாள்பூர் ஸ்டேஷன் மூடப்பட்டது.


கிராம மக்கள் தொடங்கிய போராட்டம்


நிலையம் மூடப்பட்டதும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் உங்கள் எம்எல்ஏவை சந்திக்கவும் என பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் மத்திய அரசு சம்பந்தப்பட்டது. எனவே எம்.பி.யை சந்திக்கவும் என்று கூறப்பட்டது.  அப்பகுதி மக்களும், எம்.எல்.ஏ. எம்.பி. என நிறைய கடிதப் பரிமாற்றங்கள் நடந்தன. ஆனால் உறுதியான முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. பல முறை உத்திரவாதங்கள் கொடுக்கப்பட்ட பின்னும் ஒன்றும் நடக்கவில்லை. அப்போதும் மக்கள் முயற்சியை கைவிடவில்லை. 2019 பொதுத்தேர்தலில், மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்ததும் அதிகாரிகள் செயலில் இறங்கினர். அங்கு ரயில் நிறுத்தம் அனுமதிக்கப்பட்டு டிக்கெட் முன்பதிவு செய்ய கமிஷன் ஏஜென்ட் நியமிக்கப்பட்டார்.


மேலும் படிக்க | Indian Railways: விளையாட்டுக்கு கூட இதையெல்லாம் செய்யாதீங்க... அப்புறம் ஜெயில் தான்!


அதிக டிக்கெட்டைக் விற்கப்பட்டால் அதிக ரயிகள் நிறுத்தப்படும்


ரயில் நிலையத்தை காப்பாற்றவும், சில ரயில்களை நிறுத்தவும் உள்ளூர் மக்கள் நீண்ட மற்றும் தனித்துவமான போராட்டத்தை நடத்தினர். அவர்கள் தினமும் ஒவ்வொருவராக ஸ்டேஷனுக்கு வந்து டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் எடுப்பார்கள். பிறகு பயணம் செய்யாமல் வீட்டுக்குத் திரும்புவார்கள். கிராமத்தில் உள்ள அனைவரும் மாறி மாறி, பயணம் மேற்கொள்ளவில்லை என்றாலும், டிக்கெட் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த முயற்சி சுமார் 6 மாதங்கள் நீடித்தது. இந்த முயற்சியால் நிலையம் காப்பாற்றப்பட்டது. ஆனால் இப்போதும் ரயில் நிலையத்தில் தேவையான வாகனங்கள் நிற்பதில்லை. இதனால், ரயில் நிலையத்தின் நிலை மீண்டும் மோசமடையத் துவங்கியுள்ளது.


நிலையம் துவங்கியது ஆனால் ரயில்கள் நிற்கவில்லை


பயணம் செய்யாமல் கூட டிக்கெட் வாங்கும் போராட்டம் வெற்றி பெற்றது. ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது, ஆனால் அதிக ரயில்கள் நிற்கவில்லை. தற்போது பிரயாக்ராஜ் சங்கம்-அயோத்தி கான்ட் ரயில் மட்டுமே இந்த நிலையத்தில் நிற்கிறது. அதன் வழித்தடமும் இங்குள்ள மக்களுக்கு ஏற்றதாக இல்லை. இந்த ரயில் தினமும் பிரயாக்ராஜிலிருந்து அயோத்திக்கு புறப்பட்டு தயாள்பூர் நிலையத்தில் காலை 7.31 மணிக்கு 1 நிமிடம் நிற்கிறது. இரவில், இந்த ரயில் அயோத்தியில் இருந்து 10:40 மணிக்கு வந்து பிரயாக்ராஜ் செல்கிறது. இதனால் இங்குள்ளவர்கள் நகரத்திற்கு வேலைக்காக, படிப்புக்காக செல்வது சாத்தியமாகாது.


வாழ்க்கை நம்பிக்கை சார்ந்தது


தயாள்பூரில் போதிய ரயில்கள் நிற்கவில்லை என்றாலும், மக்கள் நம்பிக்கையை விட்டு விடவில்லை. தேவையான அனைத்து ரயில்களும் இங்கு நிற்கும் ஒரு நாள் வரும் என்கிறார். பிறகு இங்கிருந்து வேலைக்காக ஊருக்குப் போவார்கள். அவர்கள் நகரங்களில் இருந்து குறைந்த விலையில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க முடியும். மேலும், பிரயாக்ராஜில் படிக்க, அங்கு அறை எடுக்க வேண்டியதில்லை. வீட்டிலிருந்து தினமும் வந்து செல்வதன் மூலம் பிரயாக்ராஜில் படிக்க முடியும்.


மேலும் படிக்க | இந்திய ரயில்வே குறித்து நீங்கள் அறியாத ‘சில’ சுவாரஸ்ய தகவல்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ