இந்திய ரயில்வே குறித்து நீங்கள் அறியாத ‘சில’ சுவாரஸ்ய தகவல்கள்!

Interesting Facts about Indian Railways: கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு ரயில் சந்திப்பு நிலையத்தின் பிளாட்ஃபார்ம் எண் 1 சுமார் 1,505 மீட்டர் நீளம் கொண்டது. மார்ச் 2021 நிலவரப்படி இது உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பார்ம் ஆகும்.

Last Updated : Jun 20, 2023, 02:21 PM IST
  • இந்திய ரயில்வே 169 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்டது.
  • இந்திய இரயில்வேயின் பாதை 115,000 கிமீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது.
  • இந்தியாவின் ரயில்வே போக்குவரத்து அமைப்பு உலகின் 4வது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும்.
இந்திய ரயில்வே குறித்து நீங்கள் அறியாத ‘சில’ சுவாரஸ்ய தகவல்கள்! title=

இந்தியாவின் ரயில்வே போக்குவரத்து அமைப்பு உலகின் 4வது பெரிய ரயில் நெட்வொர்க் ஆகும். இரயில்வே இணைப்பு நாட்டின் மூலை முடுக்குகளையும் இணைப்பதால், மிகவும் முக்கியமான, அதிக அளவில் மக்கள் பயன்படுத்தும் போக்குவரத்தாக உள்ளது. இந்திய ரயில்வே குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய நிறைய சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளன. மக்கள் மற்றும் சரக்குகளின் முக்கிய போக்குவரத்து சாதனமாக இருக்கும் இந்திய ரயில்வே பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

இந்திய ரயில்வேயின் 169 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம்

இந்திய இரயில்வே ஏப்ரல் 16, 1853 இல் நடைமுறைக்கு வந்தது. முதல் பயணிகள் ரயில் மும்பையின் போரி பந்தர் முதல் தானே வரை 34 கிலோமீட்டர் தூரம் ஓடியது.

இந்திய ரயில்வேயின் சின்னம்

இந்திய இரயில்வேக்கு என தனிப்பட்ட சின்னம், போலு என்ற 'சுபாங்கர்' உள்ளது. இந்திய ரயில்வே தனது 150வது ஆண்டு நிறைவு செய்ததை, முன்னிட்டு 2002 ஆம் ஆண்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைனால் உருவாக்கப்பட்டது போலு என்ற யானை, ரயில்வே காவலராக உடையணிந்து உருவாக்கப்பட்டது.

உலகின் 4வது பெரிய ரயில் நெட்வொர்க்

நாடு முழுவதையும் உள்ளடக்கிய 67,368 கிமீ நீளம் கொண்ட வழத்தடங்களை கொண்ட இந்திய ரயில்வே உலகின் 4வது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளது. இந்திய இரயில்வேயின் பாதையானது 115,000 கிமீ பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது மற்றும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இயக்கப்படும் உலகின் இரண்டாவது பெரிய நெட்வொர்க் ஆகும்.

இந்திய ரயில்வேயிடம்  4 யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் உள்ளன

இந்திய இரயில்வே யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட நான்கு உலக பாரம்பரிய தளங்களை சொந்தமாக வைத்துள்ளது - டார்ஜிலிங் இமயமலை ரயில் (1999 இல் சேர்க்கப்பட்டது), சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், மும்பை (2004 இல் சேர்க்கப்பட்டது), நீலகிரி மலை இரயில் (2005 இல் சேர்க்கப்பட்டது), மற்றும் கல்கா சிம்லா இரயில் (2008 இல் சேர்க்கப்பட்டது).

இந்திய ரயில்வே உலகின் மிக நீளமான நடைமேடையைக் கொண்டுள்ளது

ஸ்ரீ சித்தரூத சுவாமிஜி ஹுப்பள்ளி சந்திப்பு, SSS ஹூப்பள்ளி சந்திப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள ஒரு ரயில் சந்திப்பு நிலையம் ஆகும். ஹூப்ளி சந்திப்பின் பிளாட்ஃபார்ம் எண் 1 சுமார் 1,505 மீட்டர் நீளம் கொண்டது. மார்ச் 2021 நிலவரப்படி உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பார்ம் ஆகும்.
 
ஆடம்பர சவாரிகளை வழங்கும் ரயில்வே

ராயல் ராஜஸ்தான் ஆன் வீல்ஸ் (Royal Rajasthan on Wheels), பேலஸ் ஆன் வீல்ஸ் (Palace on Wheels), தி கோல்டன் சாரியட் (The Golden Chariot), தி மஹாராஜாஸ் எக்ஸ்பிரஸ் (The Maharajas’ Express) மற்றும் தி டெக்கான் ஒடிஸி (The Deccan Odyssey) ஆகிய 5 ராயல் ரயில்களை இந்திய ரயில்வே பெருமையுடன் கொண்டுள்ளது.

இந்தியாவின் மிக நீளமான மற்றும் குறுகிய ரயில் பயணம்

விவேக் எக்ஸ்பிரஸ் மூலம் கன்னியாகுமரியில் இருந்து திப்ருகர் வரை நீண்ட தூர ரயில் பயணம் சாத்தியமாகிறது. இது 82 மணி 30 நிமிடங்களில் 56 நிறுத்தங்களுடன் 4189 கிலோமீட்டர்களைக் கடக்கிறது. மறு புறம், நாக்பூரிலிருந்து அஜ்னிக்கு 3 கிலோமீட்டர் தூரம் மட்டுமே குறுகிய ரயில் பயணமும் உள்ளது.

மேலும் படிக்க |  ரயில்வே ஸ்டேஷன் ஒன்று... ஆனால் மாநிலங்கள் இரண்டு... இந்தியாவின் வினோத ரயில் நிலையம்!

இந்திய ரயில்வே ஒரே இடத்தில் 2 நிலையங்களைக் கொண்டுள்ளது

அகமதுநகர், ஸ்ரீராம்பூர் மற்றும் பேலாபூர் நிலையங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன. ஆனால் பாதையின் எதிர் பக்கங்களில் உள்ளன.

ரயில்வே ஸ்டேஷன் ஒன்று; ஆனால் மாநிலங்கள் இரண்டு.

இந்தியாவின் தனித்துவமான இரயில் நிலையம் இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி  மற்றொரு மாநிலத்திலும் நிற்கும். இந்த ரயில் நிலையம் பவானி மண்டி ரயில் நிலையம் ஆகும். இது மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களில் அமைந்துள்ளது. 

உலகின் மிக உயரமான ரயில் பாலம்

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலம் தாரோட்டில் செனாப் ரயில் பாலம் என்று அழைக்கப்படும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் இந்தியாவிடம் உள்ளது. ஈபிள் டவரை விட அதிக உயரம் கொண்டதாக அதாவது 1,178 அடி உயரத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. ஈபிள் டவரின் உயரத்தைவிட 35 மீட்டர் அதிக உயரம் கொண்ட செனாப் பொறியியல் அதிசயம் என அழைக்கப்படுகிறது

நாக்பூரின் புகழ்பெற்ற வைர சந்திப்பு

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள வைர சந்திப்பு இந்தியாவின் வியக்க வைக்கும் காட்சிகளில் ஒன்று. இந்திய ரயில்வேயால் டயமண்ட் கிராசிங் (Diamond Crossing) என பெயரிடப்பட்ட இந்த சந்திப்பில்,  வடக்கு-தெற்கு நோக்கிச் செல்லும் இரண்டு ரயில் பாதைகளும், கிழக்கு-மேற்கு நோக்கிச் செல்லும் மற்றொரு இரண்டு பாதைகளும் உள்ளன. அவை சதுர வடிவ வைர வடிவத்தைப் போல இருக்கும்.

மேலும் படிக்க | இந்திய ரயில்வேயின் மிக நீண்ண்ண்ட ரயில்... பெட்டிகளை எண்ணியே டயர்டாயிடும்...!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News