புதுடெல்லி: இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு நபருக்கும் நிறைய பணம் தேவை. ஆனால், நிறைய பணம் சம்பாதித்தாலும், மாதக் கடைசியில் கையை கடிக்கும்  நிலைமை பலருக்கு ஏற்படலாம். இதற்குக் முக்கிய காரணம், அவர்களால் பணத்தைச் சரியாக நிர்வகிக்க முடியாததே எனலாம். ஊதாரித்தனமாகச் செலவு செய்யும் பழக்கம் அல்லது யோசித்து செலவு செய்யாமல் இருப்பதன் காரணமாக அவர்களால் சேமிக்கவோ அல்லது வசதியாக வாழவோ முடிவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிட சாஸ்திரத்தின்படி, குறிப்பிட்ட ராசிக்காரர்கள் பட்ஜெட் போடுவதிலும், அதன்படி நடப்பதிலும் வல்லவர்கள். அவர்கள் தங்கள் கடினமான நேரங்களிலும் பணத்தைச் சேமித்து, அவர்களின் வருமானம் மற்றவர்களை விட குறைவாக இருந்தாலும், நிதி விஷயங்களில் , திறன்பட நிர்வாக செய்து வாழ்க்கையையும் வசதியாக வாழ்கிறார்கள்.


ALSO READ | 2022-ல் சனி மற்றும் ராகு பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்


சேமிப்பதில் வல்ல ராசிக்காரர்கள்


ரிஷபம் (Taurus): ரிஷபம் ராசிக்காரர்கள் எப்போதும் சிறந்த பொருட்களை விரும்பி வாங்குவார்கள். தங்கள் பொழுதுபோக்க்கிற்காக நன்றாக செலவழித்த பிறகும், அவர்கள் நிறைய சேமித்து, பண விஷயத்தில் எப்போதும் நிதானமாக இருக்கிறார்கள். இந்த மக்கள் நிதி திட்டமிடலிலும், அதனை கடைபிடிப்பதிலும் மிகவும் வல்லவர்கள். எனவே, ஒவ்வொரு மாதமும் சிறுசேமிப்பு செய்வதன் மூலம், அவர்கள் பணத்தை சேமிக்கிறார்கள்.


மிதுனம் (Gemini): மிதுன ராசிக்காரர்கள் முதலீடு செய்வதில் நல்ல புரிதல் இருக்கும். அவர்கள் நன்றாகத் திட்டமிட்டு, தங்கள் பணத்தைத் தொடர்ந்து பெருக்கிக் கொண்டே இருப்பார்கள். இவர்களுக்குப் பணப் பற்றாக்குறை இருக்காது. இவர்கள் வியாபாரத்தில் ஈடுபட்டால் நிறைய பணம் சம்பாதிப்பார்கள்.


சிம்மம்  (Leo): சிம்ம ராசிக்காரர்கள் பண விஷயத்தில் அதிர்ஷ்டசாலிகள், அதைச் சரியாகப் பயன்படுத்தி எப்போதும் பணத்தை பெருக்கிக் கொண்டே இருப்பார்கள். இந்த நபர்கள் முதலீட்டில் மிக கவனமாக இருப்பார்கள். எனவே அவர்கள் குறைந்த முதலீடு செய்தாலும் பெரிய பணத்தை சம்பாதிக்கிறார்கள். சேமிப்பதில் கவனம் செலுத்தி, அவர்கள் அதிக பணத்தை முதலீடு செய்ய முயற்சிக்கிறார்கள்.


ALSO READ | மகரத்தில் புதன் சஞ்சாரம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அட்டகாசம்


மகரம் (Capricorn): மகர ராசிக்காரர்கள் யோசிக்காமல் பணம் செலவழிக்க மாட்டார்கள். அவர்கள் பணத்தை தேவையில்லாமல் செலவழிப்பதை விட சேமிப்பதை விரும்புகிறார்கள். இதனாலேயே பல சமயங்களில் அவர்கள் தங்கள் பணத்தை அனுபவிக்க முடியாமல் தங்கள் குடும்பத்தாரோ குழந்தைகளோ அதை அனுபவிக்கின்றனர்.


ALSO READ | 2022 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR