Personality by Zodiac Sign: மிகவும் பிடிவாத குணம் கொண்ட ‘4’ ராசிகள்!
குறிக்கோள்கள், இலக்குகள், கனவுகளை நிறைவேற்ற பிடிவாதமாக இருப்பது நல்லது தான் என்றாலும், யார் பேச்சையும் கேட்காமல் தன் இஷ்டப்படி தான் நடப்பேன் செயல்படுவது பாதிப்பை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு நபரின் இயல்பும், நடத்தையும் அவரைச் சுற்றியுள்ள சூழல், அவரது பழக்கவழக்கங்கள், அவரது வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் ஆகியவற்றை பொறுத்தது என்றாலும், ஜாதகத்தின் கிரகங்கள் மற்றும் ராசி அறிகுறிகளும் அவருடைய இயல்பில், மன்ப்போக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
ஒரு நபரின் ராசி மூலம் அவரது ஆளுமை மற்றும் எதிர்காலம் பற்றி நிறைய மதிப்பிடலாம். அதில், இன்று நாம் மிகவும் பிடிவாதமாக, தன்னிஷ்டப்படி செய்லபடும் ராசிக்காரர்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
இயல்பிலேயே மிகவும் பிடிவாத குணம் கொண்ட ராசிகள்
கடகம்:
கடக ராசிக்காரர்கள் ஆற்றல் மிக்கவர்கள், அச்சமற்றவர்கள் மற்றும் விசுவாசமுள்ளவர்கள். அதே நேரத்தில், அவர்கள் மிகவும் பிடிவாதமாகவும் இருக்கிறார்கள். இவர்களை மிரட்டி எந்த வேலையும் செய்ய முடியாது. ஆனால், அன்பின் பலத்தால் அவர்களை சிறிது பணிய வைக்கல்லாம்.
மேலும் படிக்க | என்றென்றும் செல்வ செழிப்புடன் திகழ செய்ய வேண்டிய வெள்ளிக்கிழமை பரிகாரங்கள்..!!
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் நேர்மையானவர்கள், கடின உழைப்பாளிகள், விசுவாசமுள்ளவர்கள். பொய் சொல்லி ஏமாற்றுபவர்களை இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. யாராவது அவர்களை ஏமாற்ற முயற்சித்தால், அவர்கள் பழிவாங்காமல் அமைதியாக உட்கார மாட்டார்கள். இந்த விஷயத்தில், அவர்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள் மற்றும் தங்கள் மனதைச் செய்வதன் மூலம் மட்டுமே நம்புகிறார்கள்.
மகரம்:
மகர ராசிக்காரர்களும் மிகவும் பிடிவாதமாக இருப்பார்கள். இருப்பினும், அவரது இந்த பிடிவாதமும் அவருக்கு வாழ்க்கையில் பெரிய வெற்றியைக் கொடுக்கிறது. ஆனால் சில சமயங்களில் யாருடைய பேச்சையும் கேட்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கிறார்கள். இதற்காக அவர்களும் சில சமயங்களில் விலை கொடுக்க நேரிடுகிறது.
மேலும் படிக்க | கும்ப ராசியில் பிரவேசிக்கும் சுக்கிரனால் ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை தான்..!!
மீனம்:
மீன ராசிக்காரர்கள் தான் கொண்ட எண்ணத்தில் உறுதியானவர்கள். அவர்கள் நினைத்த செயலை செய்து முடித்து விட்டுத் தான் மறுபேச்சே பேசுவார்கள். அவர்கள் சவால்களுக்கு அஞ்ச மாட்டார்கள், சுயமரியாதையுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். யாரிடமும் தலைவணங்குவதை விரும்ப மாட்டார்கள். இந்த பிடிவாதத்தால் சில சமயம் நஷ்டத்தை சந்திக்க வேண்டி வரும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | 2022-ல் 2 முறை ராசி மாறுகிறார் சனிபகவான்: இவர்களுக்கு அடித்தது 2 மடங்கு அதிர்ஷ்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR