மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொண்டால் நல்லதா?
பெண்களின் மாதவிடாய் காலத்தின்போது, உடலுறவு வைத்துக்கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அந்த கேள்விக்கான உரிய பதிலை இதில் தெரிந்துகொள்ளலாம்.
பொதுவாக, உடலுறவு என்று வரும்போது, மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்ளலாமா அல்லது வேண்டாமா என பலருக்கும் குழப்பம் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் உடலுறவைத் தவிர்க்க வேண்டுமா என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் விடை காண முயல்கின்றனர்.
இந்த கேள்விக்கான பதிலை நீங்களும் தேடுகிறீர்களானால், இந்த தகவல் உங்களுக்கானது. மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால் பல நன்மைகள் உள்ளன, சில விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டால், மாதவிடாய் காலத்தில் மேற்கொள்ளும் உடலுறவு உங்களை நன்றாக உணர வைக்கும். எனவே மாதவிடாய் காலத்தில் உடலுறவு கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று இங்கு பார்ப்போம்.
மாதவிடாய் வலி நிவாரணம்
மாதவிடாய் காலத்தில், பெண்கள் பொதுவாக வலி மற்றும் தசைப்பிடிப்பை எதிர்கொள்கின்றனர், அத்தகைய சூழ்நிலையில், உடலுறவு வலி மற்றும் தசைப்பிடிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும். மாதவிடாயின் போது தசைகள் சுருங்குகின்றன, அத்தகைய சூழ்நிலையில், உடலுறவு எண்டோர்பின்களை வெளியிடுகிறது, இது வலியைக் குறைக்கிறது.
மேலும் படிக்க | கணவர்கள் ஜாக்கிரதை! திருமண உறவில் இந்த தவறுகளை செய்தால் விவாகரத்து தான்!
மனநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்துதல்
பொதுவாக பெண்கள் மாதவிடாய் காலங்களில் மனநிலை மாற்றங்களை எதிர்கொள்கின்றனர். இதனால் பெண்களின் மனநிலை கெட்டுவிடுகிறது. அத்தகைய சூழ்நிலையில் உடலுறவு கொள்வது மன அழுத்தத்தில் இருந்து அவர்களை விடுவிக்கிறது. இது மனநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.
சிறந்த அனுபவம்
மாதவிடாயின் போது நீங்கள் உடலுறவு கொண்டால், நீங்கள் சிறந்த அனுபவத்தை பெற முடியும், ஏனெனில் இந்த நேரத்தில் நீங்கள் சாதாரண நாட்களை விட நீண்ட நேரம் உடலுறவை அனுபவிக்க முடியும் என கூறப்படுகிறது. எனவே நீங்கள் அதிக மகிழ்ச்சியைப் பெறுவீர்கள்.
இந்த விஷயங்களை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம்:
- மாதவிடாய் காலத்தில் உடலுறவின் போது, AST-இன் ஆபத்து அதிகரிக்கிறது, இந்த விஷயத்தில், ஆணுறை பயன்படுத்துங்கள். ஆணுறை இல்லாமல் உடலுறவைத் தவிர்க்கவும்.
- மாதவிடாய் காலத்தில் ரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால், தூய்மை பிரச்னை உட்பட பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- மாதவிடாய் உடலுறவின் போது, ரத்த நெடியால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காதலன் கடுப்பேத்துகிறாரா... சண்டை வேண்டாம் - பெண்களே இதை செய்யுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ