கணவர்கள் ஜாக்கிரதை! திருமண உறவில் இந்த தவறுகளை செய்தால் விவாகரத்து தான்!

சந்தோஷமாக வாழும் கணவன் மனைவிகளை காட்டிலும், திருமண உறவை வெறுத்து விவாகரத்து பெறும் கணவன் மனைவிகள் அதிகமாகி வரும் சூழ்நிலையில் சில முக்கியமான தவறுகள் விவாகரத்திற்கு காரணமாக அமைகின்றது.    

Written by - RK Spark | Last Updated : Apr 2, 2023, 09:23 AM IST
  • கணவன்-மனைவி உறவுக்குள் தொடர்பு இருக்க வேண்டியது அவசியம்.
  • கணவன்-மனைவி இருவரிடையே நெருக்கம் குறைவாக இருந்தால் விவகாரத்துக்கான வாய்ப்பு அதிகம்.
  • பொருளாதார ரீதியான பிரச்சனைகளும் விவாகரத்துக்கு காரணமாக அமைகிறது.
கணவர்கள் ஜாக்கிரதை! திருமண உறவில் இந்த தவறுகளை செய்தால் விவாகரத்து தான்! title=

1) எந்தவொரு உறவாக இருந்தாலும் சரி அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும், சரியான முறையில் அவர்களுக்குள் பேச்சுவார்த்தை இல்லாவிட்டால் அந்த உறவில் எந்தவொரு பிணைப்பும் இருக்காது.  கணவன்-மனைவிக்குள் பேச்சு குறையும்போது தவறான புரிதல்கள், விரக்தி மற்றும் மனக்கசப்பு போன்றவை ஏற்பட்டு இறுதியில் விவாகரத்துக்கு வழிவகுக்கும்.

2) பெரும்பாலான கணவன் - மனைவிக்குள் விவாகரத்து ஏற்படுத்தவதற்கான முக்கியமான காரணங்களுள் ஒன்று ஒருவரையொருவர் ஏமாற்றுதல். நம்மை நம்புவர்களை ஏமாற்றுவது ஒரு மோசமான செயல்.  நம்பிக்கை துரோகத்திலிருந்து ஒருவர் மீள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

மேலும் படிக்க | உடலுறவின்போது ஆண்கள் இதையெல்லாம் கவனிப்பாங்க.. பெண்களே இத நோட் பண்ணுங்க!

3) பொருளாதார ரீதியான பிரச்சனைகள் கணவன் - மனைவி உறவுக்குள்ளும் சங்கடங்களை ஏற்படுத்தும்.  தங்கள் பணத்தை எவ்வாறு நிர்வகிப்பது என்பதில் உடன்படாத தம்பதிகள் அல்லது நிதி சிக்கலில் உள்ளவர்கள் விவாகரத்துக்குத் தள்ளப்படலாம்.

4) பொதுவாக கணவன் - மனைவி உறவுக்குள் நெருக்கம் என்பது கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று, காலம் முழுவதும் ஒன்றாக வாழக்கூடியவர்கள் நெருக்கமாக இருக்க வேண்டும்.  உறவில் நெருக்கம் இல்லாதபோது தம்பதிகளுக்குள் விரக்தியும், மனக்கசப்பும் ஏற்படும்.

5) கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை இருக்க வேண்டும், தங்களது கருத்துக்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள வேண்டும்.  இருவரது முன்னுரிமைகளும், தேவைகளும் முரண்பட்டதாக இருக்கும்போது அவர்கள் விவாகரத்து முடிவுக்குள் தள்ளப்படுகிறார்கள்.

6) அதீதமான அன்பும் சில சமயங்களில் அந்த உறவில் பிரிவினை ஏற்படுத்த காரணமாக இருக்கக்கூடும்.  சில சமயங்களில் தம்பதிகள் எந்தவொரு வலுவான காரணமும் இல்லாமல் காலப்போக்கில் பிரிந்துவிடுகின்றனர்.

7) கணவன் - மனைவி இருவருக்குள்ளும் அடிக்கடி வாக்குவாதம், சண்டை சச்சரவுகள், சோர்வு மற்றும் விரக்தி போன்றவை ஏற்பட்டு கோபத்தை ஏற்படுத்தி இறுதியில் விவாகரத்துக்கு வழிவகுக்கும்.

8) போதைப்பொருள் பழக்கங்களுக்கு அடிமையாவது உறவுக்குள் பெரியளவில் மன வேதனையையும், சிக்கலையும் ஏற்படுத்தும்.  ஒருவரது துணை போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தால் அந்த உறவு நிச்சயம் விவாகரத்தில் முடிவடையும்.

மேலும் படிக்க | பழைய நகைகள் பளிச்சென்று இருக்க சூப்பர் டிப்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News