Rashmika Mandanna Weight Loss Tips : தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகையாக மாறி இருக்கிறார் ராஷ்மிகா. கன்னட திரை உலகில் அறிமுகமாகி, டோலிவுட்டில் கால் பதித்து தமிழிலும் பிரபல ஹீரோக்களுடன் நடித்துவிட்டார். ராஷ்மிகா, திரையுலகத்திற்கு வந்தபோது சாதாரண பெண் போலிருந்தார். இப்போது ஆளே மாறிப்போய், வேற லெவலில் இருக்கிறார். தன் உடலை சரியாக பராமரிக்க, எடை ஏறாமல் பார்த்துக் கொள்ள, ஏறினால் அதை குறைக்க என இவர் பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கொள்கிறார். அது குறித்து இங்கு பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆரோக்கியமான வாழ்க்கை முறை: 


திரைத்துறையில் இருப்பவர்கள், விளையாட்டு வீரர்களாக இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது வழக்கம். அதேதான் ராஷ்மிகாவும் செய்து வருகிறார். வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் சாப்பிடும் இவர், துரித உணவுகளை மறந்து கூட தொடுவதில்லையாம். புரதச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடும் இவர், பெரும்பாலும் தாவர டயட்டில் இருப்பாராம். அப்படி என்றால், தாவர காய்கறிகளான இறை போன்ற உணவுகளை தனது டயட்டில் சேர்த்துக் கொள்வாராம். 


வொர்க் அவுட்: 


ஒரு வாரத்தில் நான்கு முறை வொர்க் அவுட் செய்வதை ராஷ்மிகா தவிர்ப்பதில்லையாம். கிக் பாக்ஸிங், நடனம் ஆடுவது, நீச்சல் பயிற்சி, யோகா, வேகமாக நடைப்பயிற்சி செய்வது போன்ற விஷயங்கள் இவர் உடல் எடையை சரியாக பராமரிக்க காரணமாக இருக்கிறதாம். மேலும், முழு உடல் பயிற்சி செய்வதால் இவர் ஃபிட் ஆகவும் இருக்கிறார். 


தசை வலுப்படுத்துதல்:


ஆண்கள் மட்டும்தான் வெயிட் தூக்கி உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற ஒரு தவறான கருத்து இருக்கிறது. ஆனால் பெண்களும் பளு  தூக்கி தங்களின் தசைகளை வலுப்படுத்தலாம். இதை பின்பற்றும் ராஷ்மிகா, கூடவே சேர்த்து புஷ் அப், புல் அப், டம்பில் ஒர்க் அவுட் ஆகியவற்றையும் செய்கிறார். 


காலையில் செய்யும் விஷயங்கள்: 


ராஷ்மிகா காலிங் விழுந்தவுடன் தண்ணீர் குடிக்க தவறுவதில்லை. காலையில் மட்டும் ஒரு லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிப்பாராம். கூடவே, இப்போதாவது ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து குடிப்பார். இதனால் செரிமான சத்துக்கள், மெட்டபாலிசம் அதிகமாகும். இது அவரது நாளை சரியாக தொடங்குவதற்கு உதவுகிறது. 


காலை உணவுகள்: 


காலையில் ராஷ்மிகா, பிரபலமான அவகேடோ டோஸ்ட் செய்து சாப்பிடுவாராம். இதில் நல்ல குறிப்பு மற்றும் புரத சத்துக்கள் நிறைந்திருக்கிறது. அது மட்டுமன்றி காலையில் உடலுக்கு ஆற்றல் தரும் உணவுகளை சாப்பிடும் இவர், ஹெல்தியான ஸ்நாக்ஸ்களையும் தன் உணவில் சேர்த்துக்கொள்கிறார். 


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க நயன்தாரா ‘இதை’ குடிப்பாராம்! என்ன தெரியுமா?


ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்:


துரித உணவுகளை தவிர்க்கும் ராஷ்மிகா, ஹெல்தியான ஸ்னாக்ஸ்களை தனது டயட்டில் சேர்த்துக்கொள்கிறார். சர்க்கரை வள்ளிக்கிழங்கு உள்ளிட்ட சில ஆரோக்கிய உணவுகளை எடுத்துக்கொள்கிறார். 


சமமான டயட்: 


ராஷ்மிகாவும் அவ்வப்போது சீட் டேவை கடைப்பிடிக்கிஆர். தான் டயட் இல்லாத நாட்களில் தனக்கு பிடித்த உணவுகளை சாப்பிடும் இவர், அதற்கு அடுத்தடுத்த நாட்களில், சரியாக புரதச்சத்து உள்ள உணவுகளை சாப்பிட்டு தன் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்கிறார். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க அல்லு அர்ஜுன் செய்யும் உடற்பயிற்சி! வெறும் வயிற்றில் செய்யனுமாம்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ