ரேஷன் கார்டு-ஆதார் இணைப்பு: ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு முக்கிய செய்தி!! ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' தொடர்பான பணிகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் கீழ், நீங்கள் எந்த மாநிலத்தில் உள்ள எந்த கடையில் இருந்தும் ரேஷன் பொருட்களை வாங்க முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கு, பயனாளிகள் ரேஷன் கார்டு மற்றும் ஆதாரை இணைக்க வேண்டியது மிக முக்கியமாகும். 


ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது


உங்கள் ரேஷன் கார்டை இதுவரை ஆதாருடன் இணைக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் சிக்கல்கள் வரலாம். சிக்கலில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க ஆதார் மற்றும் ரேஷன் அட்டையை சரியான நேரத்தில் இணைப்பது அவசியமாகும். முன்னதாக இதற்கான காலக்கெடுவாக அரசு மார்ச் 31ஆம் தேதி-ஐ நிர்ணயித்திருந்தது. ஆனால் தற்போது ஆதாரை இணைக்கும் தேதி ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' என்ற திட்டத்தை பல லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்


குறைந்த விலையில் ரேஷன் கிடைப்பது மட்டுமின்றி, ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு மேலும் பல சலுகைகளும் கிடைக்கின்றன. 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பதன் மூலம் 'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.


மேலும் படிக்க | Ration Card புதிய விதி, உடனடியாக இதை செய்யுங்கள், இல்லையெனில் சிக்கல் தான் 


ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி


1. முதலில் ஆதார் இணையதளமான uidai.gov.in க்குச் செல்லவும்.
2. இங்கே 'ஸ்டார்ட் நவ்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
3. இங்கே, உங்கள் முகவரி மற்றும் மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும்.
4. இதற்குப் பிறகு 'ரேஷன் கார்டு பெனிஃபிட்’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
5. இங்கே உங்கள் ஆதார் அட்டை எண், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை உள்ளிடவும்.
6. அதை பூர்த்தி செய்த பிறகு, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் ஓடிபி வரும்.
7. நீங்கள் ஓடிபி-ஐ நிரப்பியவுடன், உங்கள் திரையில் செயல்முறை முடிந்த செய்தியைப் பெறுவீர்கள்.
8. இந்த செயல்முறை முடிந்ததும், உங்கள் ஆதார் சரிபார்க்கப்படும். மேலும் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு இணைக்கப்படும்.


ஆதாரை ஆஃப்லைனில் இணைப்பது எப்படி
ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைக்க, ஆதார் அட்டை நகல், ரேஷன் கார்டு நகல் மற்றும் ரேஷன் கார்டு வைத்திருப்பவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய முக்கிய ஆவணங்களை ரேஷன் கார்டு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தவிர, உங்கள் ஆதார் அட்டையின் பயோமெட்ரிக் தரவு சரிபார்ப்பும் ரேஷன் கார்டு மையத்தில் செய்யப்படலாம்.


மேலும் படிக்க | ரேஷன் கார்டில் விதிகளை மாற்றும் மத்திய அரசு! இனி இதுலாம் கிடைக்குமா? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR