எஃப்டி விதிகளில் மாற்றம்: ஃபிக்ஸ்ட் டெபாசிட், அதாவது நிலையான வைப்புத் தொகையில் நீங்களும் பணத்தை போட்டிருந்தால், இது உங்களுக்கு பயனுள்ள செய்தியாக இருக்கும். எஃப்டி தொடர்பான விதிகளை இந்திய ரிசர்வ் வங்கி மாற்றியுள்ளது. புதிய விதிகள் அமலுக்கும் வந்துவிட்டன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக, பல அரசு மற்றும் அரசு சாரா வங்கிகள் எஃப்டி-களுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளன. ஆகையால், எஃப்டி போடுவதற்கு முன்னர் சற்று புத்திசாலித்தனமாக செயல்படுவது அவசியமாகும். புதிய விதிகளை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால் இழப்பை சந்திக்க நேரிடும்.


எஃப்டி முதிர்வு குறித்த மாற்றப்பட்ட விதிகள்


ரிசர்வ் வங்கி நிலையான வைப்புத்தொகையின் (FD) விதிகளில் ஒரு பெரிய மாற்றத்தை செய்துள்ளது. இப்போது மெச்யூரிட்டிக்கு பிறகு, நீங்கள் அந்தத் தொகையை க்ளைம் செய்யவில்லை என்றால், அதற்கு குறைவான வட்டியைப் பெறுவீர்கள். இந்த வட்டி சேமிப்பு கணக்கில் பெறப்படும் வட்டிக்கு சமமாக இருக்கும். தற்போது, ​​வங்கிகள் வழக்கமாக 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால எஃப்டிகளுக்கு 5%-க்கும் மேல் வட்டி அளிக்கின்றன. சேமிப்புக் கணக்கில் வட்டி விகிதம் 3 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை இருக்கும்.


மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வு பற்றிய முக்கிய செய்தி, இந்த நாளில் அறிவிப்பு வெளியாகுமா? 


ரிசர்வ் வங்கி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது


ரிசர்வ் வங்கி வழங்கிய தகவலின்படி, நிலையான வைப்பு முதிர்ச்சியடைந்து, தொகை வாடிக்கையாளருக்கு அளிக்கப்படாமல் இருந்தாலோ அல்லது அந்த தொகை கோரப்படாமல் இருந்தாலோ, அதற்கு சேமிப்புக் கணக்கின்படி வட்டி விகிதம் அல்லது முதிர்ச்சியடைந்த FD க்கு நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதம், இரண்டில் எது குறைவோ அது வழங்கப்படும். இந்த புதிய விதிகள் அனைத்து வணிக வங்கிகள், சிறு நிதி வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், உள்ளூர் பிராந்திய வங்கிகளில் உள்ள டெபாசிட்களுக்கு பொருந்தும்.


விதிகள் என்ன சொல்கின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்


ஒரு உதாரணத்தின் மூலம் இதை புரிந்துகொள்ளலாம். நீங்கள் 5 வருட மெச்யூரிடி உடைய எஃப்டி போட்டுள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். அது இன்று முடிவடைந்திருந்து, நீங்கள் அந்த தொகையை எடுக்காமல் போனால், இரண்டு விஷயங்கள் நடக்கலாம். 


அந்த வங்கியின் சேமிப்புக் கணக்கின் வட்டியை விட எஃப்டி-யில் பெறப்படும் வட்டி குறைவாக இருந்தால், எஃப்டி மீதான வட்டியை நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். சேமிப்புக் கணக்கில் கிடைக்கும் வட்டியை விட எஃப்டி-யில் கிடைக்கும் வட்டி அதிகமாக இருந்தால், முதிர்வுக்குப் பிறகு சேமிப்புக் கணக்கின் வட்டியைப் பெறுவீர்கள்.


இதுதான் பழைய விதி


முன்னதாக, உங்கள் எஃப்டி முதிர்ச்சியடைந்த பிறகு, ​​நீங்கள் தொகையை எடுக்கவில்லை அல்லது கிளைம் செய்யவில்லை என்றால், நீங்கள் முன்பு எஃப்டி செய்த அதே காலத்திற்கு வங்கி உங்கள் எஃப்டி-யை நீட்டித்துவிடும். ஆனால் இப்போது அப்படி நடக்காது. இப்போது மெச்யூரிட்டிக்கு பிறகு பணத்தை எடுக்கவில்லை என்றால், அதற்கு எஃப்டி வட்டி கிடைக்காது. ஆகையால், மெச்யூரிட்டி முடிந்த உடனேயே தொகையை எடுத்து விடுவது ல்லது. 


மேலும் படிக்க | RBI Alert: பழைய ரூபாய் நோட்டுகள், நாணயங்கள் விற்பவர்கள் ஜாக்கிரதை 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR