சேதமடைந்த நாணய மாற்றத்திற்கான ஆர்பியை விதிகள்: நாம் கடைகளுக்கு செல்லும்போதோ, பயணங்களிலோ, பொது போக்குவரத்தில் பயணிக்கும்போதோ, சில சிதைந்த நோட்டுகள் நம்மிடம் வந்து சேர்வதுண்டு. ஆனால், நாம் அவற்றை வேறு யாரிடமாவது கொடுக்க முயற்சிக்கும் போது பலர் அதை வாங்க மறுத்து விடுகிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்தகைய சூழ்நிலையில், சந்தையில் இந்த நோட்டை மாற்றுவதில் சிக்கல் எழுகிறது. ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலையில், அச்சப்பட வேண்டிய அவசியமோ, சிதைந்த நோட்டை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டிய அவசியமோ இல்லை. நீங்கள் எளிதாக இவற்றை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம். 


சிதைந்த நோட்டுகளை மாற்ற வங்கி மறுக்க முடியாது


ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, எந்த வங்கியிலிருந்தும் சிதைந்த நோட்டுகளை எளிதாக மாற்றிக் கொள்ளலாம். எந்த வங்கியும் கிழிந்த நோட்டுகளை மாற்ற மறுக்க முடியாது. அப்படி செய்தால் அந்த வங்கி மீது ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்க முடியும். 


ஆனால், நோட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு அதன் மதிப்பு குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. வாடிக்கையாளர்களின் வசதிக்காக, மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அந்த வழிகாட்டுதல்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


சிதைந்த ரூபாய் நோட்டுகளில் இந்த விஷயங்கள் கண்டிப்பாக தெளிவாகத் தெரிய வேண்டும்


- ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி, ஒரு வாடிக்கையாளர் சிதைந்த ரூபாய் நோட்டை வங்கிக்கு எடுத்துச் சென்றால், அந்த நோட்டில், காந்திஜியின் படம், ஆர்பிஐ கவர்னரின் கையெழுத்து, வாட்டர்மார்க் மற்றும் வரிசை எண் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இருக்கிறதா என்பதை வங்கி முதலில் சரிபார்க்கிறது. 


மேலும் படிக்க | ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: வட்டி விகிதங்களில் மாற்றம் 


- இவை அனைத்தும் இருந்தால், இதற்குப் பிறகு, நோட்டை மாற்ற வங்கி மறுக்க முடியாது. 


- உங்களிடம் 5, 10, 20 மற்றும் 50 ரூபாய் போன்ற குறைந்த மதிப்புள்ள நோட்டுகள் இருந்து, அவற்றில் மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தெரியும் வகையில் இருந்து, அதன் ஒரு பகுதியேனும் நன்றாக இருந்தால், அந்த நோட்டை வங்கியில் இருந்து எளிதாக மாற்றலாம்.


- மறுபுறம், உங்களிடம் 20 க்கும் மேற்பட்ட கிழிந்த நோட்டுகள் இருந்து, அவற்றின் மதிப்பு 5000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அந்த நோட்டுகளை மாற்றுவதற்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். 


- கட்டணம் செலுத்திய பிறகு வங்கி ரூபாய் நோட்டை மாற்றும். 


துண்டாக கிழிந்த நோட்டுகளையும் மாற்ற முடியும்


- பல முறை நோட்டுகள் துண்டு துண்டாகக்கூட கிழிந்து விடுகின்றன. அப்படி கிழ்ந்திருந்தாலும், அவற்றை மாற்ற முடியும். 


- ஆனால், இதற்கு இந்த ரூபாய் நோட்டின் துண்டுகளை அருகில் உள்ள ரிசர்வ் வங்கியின் கிளைக்கு அனுப்ப வேண்டும். 


- இதனுடன், வங்கி கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி குறியீடு மற்றும் நோட்டின் மதிப்பு ஆகியவற்றை எழுதி அனுப்ப வேண்டும்.


மேலும் படிக்க | May 2022: மே மாதம் இவற்றில் எல்லாம் முக்கிய மாற்றம், விவரம் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR