ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: வட்டி விகிதங்களில் மாற்றம்

ICICI Bank Hikes FD Interest Rates: தனியார் துறையின் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 30, 2022, 06:00 PM IST
  • ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி.
  • ஐசிஐசிஐ எஃப்டி வட்டி விகிதங்களில் மாற்றம்.
  • ஐசிஐசிஐ வங்கி நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது.
ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி: வட்டி விகிதங்களில் மாற்றம் title=

சிஐசிஐ எஃப்டி வட்டி விகிதங்கள்: தனியார் துறையின் முன்னணி வங்கியான ஐசிஐசிஐ வங்கி, வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. நீங்கள் ஐசிஐசிஐ வங்கியில் கணக்கு வைத்திருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். 

ஐசிஐசிஐ வங்கி நிரந்தர வைப்புத் தொகை-க்கான வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தியுள்ளது. இப்போது இந்த அதிகரிப்பு 0.10 சதவீதமாக உள்ளது.

10 அடிப்படை புள்ளி உயர்வு

முன்னதாக, வங்கியின் வட்டி விகிதம் 5-10அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டது. இம்முறை வங்கி 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இந்த முறை வங்கியானது வெவ்வேறு தவணைக்காலங்களின் நிலையான வைப்புத்தொகைக்கான விகிதங்களை ரூ.2 கோடியிலிருந்து ரூ.5 கோடி வரை உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, மார்ச் மாதத்தில் வங்கியால் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது. புதிய விகிதங்கள் மார்ச் 22 முதல் அமலுக்கு வந்தன. இம்முறை ஏற்பட்டுள்ள 10 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பு ஏப்ரல் 28 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

எந்த கால அலவிற்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்? (2 கோடி முதல் 5 கோடி வரையிலான வைப்புத்தொகைக்கு)

7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை- 2.50%, மூத்த குடிமகக்கள்- 2.50%
15 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை - 2.50%, சீனியர் குடிமக்கள் - 2.50%
30 நாட்கள் முதல் 45 நாட்கள் வரை - 2.75%, சீனியர் குடிமக்கள் - 2.75%
46 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை- 2.75%, மூத்த குடிமக்கள் - 2.75%
61 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை - 3.00 %, சீனியர் குடிமக்கள் - 3.00 %
91 நாட்கள் முதல் 120 நாட்கள் வரை - 3.35%, மூத்த குடிமக்கள்- 3.35%
121 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை - 3.35%, மூத்த குடிமக்கள்- 3.35%
151 நாட்கள் முதல் 184 நாட்கள் வரை- 3.35%, மூத்த குடிமக்கள்- 3.35%
185 நாட்கள் முதல் 210 நாட்கள் வரை- 3.60%, சீனியர் குடிமக்கள் - 3.60%
211 நாட்கள் முதல் 270 நாட்கள் வரை- 3.60%, சீனியர் குடிமக்கள்- 3.60%
271 நாட்கள் முதல் 289 நாட்கள் வரை- 3.80%, சீனியர் குடிமக்கள்- 3.80%
290 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவான காலம் - 3.80%, மூத்த குடிமக்கள்- 3.80%
1 வருடம் முதல் 389 நாட்கள் வரை----4.35%, மூத்த குடிமக்கள்----4.35%
390 நாட்கள் முதல் 15 மாதங்களுக்கும் குறைவான காலம் - 4.35%, மூத்த குடிமக்கள்- 4.35%
15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை - 4.45%, மூத்த குடிமக்கள்- 4.45%
18 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை - 4.60%, மூத்த குடிமக்கள்- 4.60%
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை - 4.70%, மூத்த குடிமக்கள்- 4.70%
3 ஆண்டுகள் 1 நாள் முதல் 5 ஆண்டுகள் வரை - 4.80%, மூத்த குடிமக்கள்- 4.80%
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை- 4.80%, மூத்த குடிமக்கள்- 4.80%

மேலும் படிக்க | May 2022: மே மாதம் இவற்றில் எல்லாம் முக்கிய மாற்றம், விவரம் இதோ 

ஐடிபிஐ வங்கி எஃப் வட்டி விகிதங்கள்
07-14 நாட்கள்: 2.7 சதவீதம்
15-30 நாட்கள்: 2.7 சதவீதம்
31-45 நாட்கள்: 3 சதவீதம்
46-60 நாட்கள்: 3.25 சதவீதம்
61-90 நாட்கள்: 3.4 சதவீதம் 3.9
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை: 3.75 சதவீதம்
6 மாதங்கள் முதல் 270 நாட்கள் வரை: 4.4 சதவீதம்
271 நாட்கள் முதல் 1 ஆண்டுக்கும் குறைவான காலம் வாரி: 4.5 சதவிகிதம் 
1 வருடத்திற்கு: 5.15 சதவீதம்
1 வருடம் முதல் 2 ஆண்டுகள் வரை: 5.25 சதவீதம்
2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை: 5.35 சதவீதம்
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை: 5.5 சதவீதம்
5 ஆண்டுகளுக்கு: 5.6 சதவீதம்
5 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை: 5.6 சதவீதம்
7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை: 5.5 சதவீதம்
 
(மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் ஒவ்வொரு கால அளவிற்கும் 0.50 சதவீதம் அதிகமாகும்.)

எச்டிஎஃப்சி வங்கி எஃப்டி வட்டி விகிதங்கள்
7 முதல் 14 நாட்கள்: 2.50%
15 முதல் 29 நாட்கள்: 2.50%
30 முதல் 45 நாட்கள்: 3%
61 முதல் 90 நாட்கள்: 3%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் வரை: 3.5%
6 மாதங்கள் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரை: 4.4%
9 மாதங்கள் 1 நாள் முதல் 1 வருடம் வரை: 4.40%
1 வருடம் 1 நாள் முதல் 2 ஆண்டுகள் வரை : 5.10%
2 ஆண்டுகள் 1 நாள் முதல் 3 ஆண்டுகள் வரை: 5.20%
3 ஆண்டுகள் முதல் 1 நாள் 5 ஆண்டுகள்: 5.45%
5 ஆண்டுகள் 1 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை: 5.60%

மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் டிஏ அதிகரிக்குமா? ஏஐசிபிஐ தரவுகள் சொல்வது என்ன 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News