ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணிற்கோ ஒருவரை பார்த்ததும் பிடித்துவிட்டால் அவர்களிடம் பேச எண்ணுவார்கள். ஒருகட்டத்தில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்ததும் தொடர்ந்து எதாவது ஒன்றை பேசிக்கொண்டே இருப்பார்கள். இதனால் உறவு பலப்படும் என்று எண்ணினால் அது தவறு. ஒரு உறவில் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் நேசிக்கின்றனர். அவர்களுக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கின்றனர். ஆரம்பகால உறவில் ஆண் பெண் இருபாலரும் தங்கள் காதலை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். ஆனால் இந்த சமயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஆர்வத்தில் தொடர்ந்து அவர்களுக்கு மெசேஜ் அனுப்பி கொண்டே இருப்போம். இது கட்டத்தில் உங்கள் மீது எரிச்சலை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே உறவின் ஆரம்பக்கட்டத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க |  ஆயிரக்கணக்கில் செலவழிக்க தேவையில்லை... வீட்டிலேயே கோல்ட் ஃபேஷியல் செய்து கொள்ளலாம்


ஆண் மற்றும் பெண் இருவரும் உறவில் இருந்தால் உங்களுடன் எப்போதும் பேசி கொண்டே தான் இருக்க வேண்டும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது இரண்டு பேரின் தனிப்பட்ட ஆசையுடன் தொடர்புடையது. எனவே, அவர்களை பாசமாக பார்த்து கொள்கிறேன் என்று தொடர்ந்து ஒருவருக்கு மெசேஜ் அனுப்புவது நல்லது இல்லை. காலையில் எழுந்ததில் இருந்து, இரவு தூங்கும் வரை தொடர்ந்து மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்ய கூடாது. இதனை தவிர்க்க வேண்டும். மேலும் ஒருசிலர் என்ன செய்து கொண்டு இருக்கிறாய், எங்கே இருக்கிறாய், என்ன சாப்பிட்ட என்று அவர்களை சரிபார்க்க தொடர்ந்து மெசேஜ் செய்து வழக்கம்.


ஒருவேளை மெசேஜ் அனுப்பவில்லை என்றால் ஏன் எனக்கு மெசேஜ் அனுப்பவில்லை? திடீரென்று என்ன ஆனது? எங்கே போய் இருப்பார்? என்னுடன் பேசாமல் அப்படி என்ன முக்கியமான வேலை? உடனே எனக்கு மெசேஜ் செய்ய வேண்டும், என்னை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து யோசிக்க வைக்கும். இது ஒருவித விரக்தியை ஏற்படுத்தி உறவில் சண்டை வர காரணமாக அமைந்துவிடும். எனவே தொடர்ந்து மெசேஜ் செய்து தொந்தரவு செய்யமால் இருப்பது உறவை பலமாக வைத்து கொள்ள உதவும்.


தொடர்ந்து மெசேஜ் அனுப்புவதால் ஏற்படும் பாதிப்புகள்


உங்கள் துணைக்கு தொடர்ந்து மெசேஜ் அனுப்புவதை நீங்கள் தவிர்க்க வேண்டும், இப்படி நீங்கள் செய்வது உங்கள் கூட்டாளரை கட்டுப்படுத்த முயற்சிப்பதை போன்றது. எனவே அந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களை தொந்தரவு செய்யாமல் இருப்பது நல்லது. உங்கள் துணையின் மீதுள்ள அதிக பாசத்தால் அவரிடம் தொடர்ந்து பேச வேண்டும் என்ற எண்ணம் ஏற்படலாம். அவர்கள் என்ன செய்கிறார்கள், சாப்பிட்டாரா இல்லையா என்று கவலைப்படலாம்.  ஆனால் அதற்காக அடிக்கடி மெசேஜ் அனுப்பி தொந்தரவு செய்வது அவர்களை எரிச்சலடையச் செய்யலாம். எனவே, உறவை வலுப்படுத்த தொந்தரவு செய்யாமல் இருந்தாலே போதும்.


உங்கள் காதலன் அல்லது காதலி நீண்ட நேரமாக உங்களுக்கு மெசேஜ் அனுப்பவில்லை என்றாலும், அதற்காக நீங்கள் சண்டை போட கூடாது. அதிலிருந்து எந்த தவறான அர்த்தத்தையும் எடுக்க வேண்டாம். ஒருசிலருக்கு வேலை காரணமாக நீண்ட நேரம் பேசாமல் கூட இருக்க கூடும். எனவே அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும், தொடர்ந்து மெசேஜ் அனுப்ப வேண்டாம். முன்பு சொன்னது போல சில தனிப்பட்ட காரணங்களால் அல்லது வேலை தொடர்பான காரணங்களால் உங்களது மெசேஜ்க்கு பதில் அனுப்பாமல் இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில் அவர்களிடம் பேசும் போது அவர்களின் தினசரி வேலைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஒருவேளை முக்கியமான செய்தி எதாவது இருந்தால் மெசேஜ் அனுப்புவதற்கு பதிலாக கால் செய்து பேசலாம். அப்போது உங்களது அழைப்புகளை புறக்கணிக்க மாட்டார்கள்.


மேலும் படிக்க |  எந்தவித டயட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்கணுமா? இதோ எளிய வழிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ