தத்தெடுக்கப்பட்ட நாய் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்த நாய்க்குப் போட்டோ சூட் எடுத்த புகைபடங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அது வாழ்நாளில் நம்மால் மறக்க முடியாத நிகழ்வாக கூட அமையலாம். இந்நிலையில், தத்தெடுக்கப்பட்ட நாய் கர்ப்பமாக இருப்பதை அறிந்து அந்த நாய்க்குப் போட்டோ சூட் (MATERNITY PHOTOSHOOT) எடுத்த புகைபடங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 


அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த கைட்டி ஈவர்ஸ் என்பவருக்கு, நாய்களின் மீது பிரியம் கொண்ட இவர் சமீபத்தில் ரோட்டில் கைவிடப்பட்ட ஒரு நாயை மீட்டெடுத்துள்ளார். அந்த நாயை அவர் தத்தெடுத்து அதற்கு மருத்துவ பரிசோதனை செய்யும் போது அந்த நாய் கர்ப்பமாக (pregnant dog) இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நாயை வைத்து பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது வித விதமாகப் புகைப்படம் எடுப்பார்களே அதே இந்த நாயை வைத்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார். 


ALSO READ | அடுத்த 60 வருடங்களுக்கு பீட்சா இலவசம்.. தம்பதியினருக்கு அடித்த ஜாக்பாட்!



மேலும், அந்த நாய்க்கு லில்லி மே (LILY MAE) எனப் பெயரிட்டுள்ளார். கோல்டன் ரிட்ரைவர் ரக நாயான லில்லி மே-ன் புகைப்படத்தை அதைப் புகைப்படம் எடுத்தவர் தனது இஸ்டாகிராமில்பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. லில்லி -மே தற்போது 8 குட்டியைப் போட்டுள்ளது. தற்போது அந்த 8 குட்டிகளையும், தாயையும் கைட்டியே தத்தெடுத்துள்ளார். மனிதர்களைப் போல நாய் கர்ப்பமாக இருக்கும் போது அதற்காகப் போட்டோ சூட் நடத்திய புகைபடங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR