செவ்வாய் ராசி பரிவர்த்தனை 2022: தைரியம், ஆற்றல், நிலம், திருமணம் ஆகியவற்றுக்கு காரகரான செவ்வாய் கிரகம் பிப்ரவரி 26ம் தேதி ராசியை மாற்றப் போகிறார். செவ்வாயின் ராசி மாற்றம் பெரிய மாற்றம். அதன் பலன் அனைத்து ராசிகளிலும் எதிரொலிக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செவ்வாய்க்கு நட்பாக இருக்கும் ராசிகளை சேர்ந்தவர்களுக்கு அல்லது ராசி அதிபதி செவ்வாயின் நண்பராக இருக்கும் ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் நன்றாக இருக்கும், ஆனால் 3 ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி வேதனை தரக்கூடியது. 


இந்த செவ்வாய் பெயர்ச்சி சனியின் மகர ராசியில் நடக்கிறது. எந்த ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் அசுபமானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ‘4’ ராசிகளுக்கு இந்த புத்தாண்டு ஜாக்பாட்


இந்த 3 ராசிக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் இந்த சஞ்சாரம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலகட்டம். அவர்களின் வாழ்க்கையில் இந்த ராசி மாற்றம் திருமணம், கூட்டு மற்றும் தொழில் ஆகியவற்றில் சிரமங்களை ஏற்படுத்தும்.


கூட்டாண்மை தொடர்பான முடிவுகளை சிறிது காலம் தள்ளிப் போடுவது நல்லது. உங்கள் வாழ்க்கைத்துணையிடம் புத்திசாலித்தனமாக நடந்துக் கொள்வது உத்தமம்.


தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் சஞ்சாரம் நிதி நிலைமையை பாதிக்கும். சொத்து தகராறு ஏற்படலாம் அல்லது பழைய தகராறு மீண்டும் தலை தூக்கலாம். பேச்சு சற்று உக்ரமாக இருக்கும் என்பதால்,


சர்ச்சைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் அமைதியான முறையில் தீர்க்க முயற்சிப்பது நல்லது. பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும்.  கடன் கொடுத்த பணம் திரும்ப வராது.


மேலும் படிக்க | சனி, குரு உட்பட இந்த கிரகங்களின் நிலைகளில் மாற்றம்: யாருக்கு ஆபத்து? யாருக்கு ஆதாயம்? 


கும்பம்: கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நல்லதல்ல, எனவே இந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். எந்த ஒரு பெரிய விஷயத்திலும் தலைநீட்ட வேண்டாம். 


முக்கியமான வேலைகளில் பெரியவர்களுடன் அனுசரித்துப் போகவும். பயணங்கள் அதிகரிக்கும் ஆனால் அதனால் பயன் எதுவும் இருக்காது. இந்த நேரத்தில் பொறுமையாக இருப்பதும், சண்டை சச்சரவுகளை தவிர்ப்பதும் நல்லது.


(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பணம், புகழ், மகிழ்ச்சி, நிம்மதி என அனைத்தும் அடைக்கலம் புகும் நபர்கள் இந்த ராசிக்காரர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR