Saturn Transit 2022: சனி நீதியின் கடவுள் என்பதால், செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது. 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. கடந்த ஏப்ரல் 29-ம் தேதி கும்ப ராசியில் சனி பிரவேசித்த போது, மீன ராசியில் சனியின் ஏழரை நாட்டு சனி காலம் துவங்கியது. சனி தேவன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஜூலை 12 ஆம் தேதி காலை 10.28 மணிக்கு, மகர ராசியில்  நுழைந்தார். ஜனவரி 17, 2023 வரை மகர ராசியில் இருப்பார். 23 அக்டோபர் 2022 அன்று, சனி பகவான், வக்ர நிலையில் இருந்து மாறி, தனது வழக்கமான நேர் இயக்கத்துக்கு மாறுவார். 2023, ஜனவரி 17 வரை இதே நிலையில் இருப்பார். அதன் பிறகு 2023 ஜனவரி 17 ஆம் தேதி கும்பத்தில் நுழைகிறார். இதனால், சில ராசிக்காரர்களுக்கு அமோகமான பலன்கள் கிடைக்கும். அந்த ராசிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சனியின் வக்ர பெயர்ச்சி காலத்தில் அமோக பலனகளை பெறும் ராசிகள்:


மேஷம்: மகர ராசியில் சனியின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு வேலை, வியாபாரத்தில் பல நன்மைகளைத் தரும். இந்த நேரத்தில் வாழ்கையில் முன்னேற்றம் அடைவார்கள். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும், நிதி நிலை சாதகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய வேலை வாய்ப்பு என எல்லா வகையிலும் நன்மைகள் கிடைக்கும். அதே நேரத்தில், வணிகத்தில் முக்கிய ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்படலாம். வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கும் இது ஒரு நல்ல நேரம். 


மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்


தனுசு: அக்டோபர் வரை சனிபகவானின் வக்ர பெயர்ச்சி காலத்தில், தனுசு ராசிக்காரர்கள் பல விதமான நன்மைகளைப் பெறுவார்கள். திடீர் பண வரவு ஏற்படும். நிதி நிலை சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணமும் கிடைக்கும். இது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். முதலீடுகளில் சிறந்த வருமானம் கிடைக்கும். கடனாக கொடுத்த பணம் வராத என நினைத்த நிலையில், பணம் திரும்ப கிடைக்கலாம். அரசியல்வாதிகளுக்கு பெரிய பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இனிமையாகப் பேசி, திறமையினால் அதிக லாபம் அடைவீர்கள்.


மீனம்: மீன ராசிக்காரர்களுக்குப் வக்ர பெயர்ச்சி காலத்தில், சனி பகவான் அதிகப் பணத்தைத் தருவார். அவர்களின் வருமானம் அதிகரிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன, இது நிதி நிலைமையை வலுப்படுத்தும். புதிய வழிகளில் வருமானம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் புதிய தொடர்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சில வெற்றிகள் கிடைக்கலாம். அது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ