வேத ஜோதிடத்தின் படி, ஒரு கிரகம் பிற்போக்கு நிலையில் இருக்கும் போது, ​​அது அனைத்து 12 ராசிகளையும் பாதிக்கிறது. கர்மவினை அளிப்பவரான சனிதேவர் ஏப்ரல் 29ஆம் தேதி கும்ப ராசியில் சஞ்சரிக்க உள்ளார். பின்னர் சனியின் வக்ர நகர்வு ஜூன் 5 முதல் தொடங்க உள்ளது. சனியின் வக்ர நகர்வு இந்த 3 ராசிக்காரர்களுக்கும் அதிக கெடுபலனை தரும். எனவே  எந்த ராசியெல்லாம் கெடுபலனை பெறுவார்கள் என்பதைப் பார்ப்போம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்- மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் வருமானத்தில் ஏற்ற இறக்கங்களைக் காணலாம். வியாபாரத்தில் நஷ்டம் வரலாம். இந்த காலகட்டத்தில் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள். இந்த நேரத்தில் சனி மற்றும் ஹனுமான் சாலிசாவை பாராயணம் செய்து பலன் பெறுவீர்கள்.


மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்


சிம்மம் - இந்த காலகட்டத்தில் மனைவியுடன் விரிசல் ஏற்படலாம். கணவன்-மனைவி இடையே ஏதாவது வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வியாபாரிகளுக்கு நேரம் சாதகமாக இல்லை. மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். சனிக்கிழமையன்று ஆல மரத்தை வழிபடுவது நன்மைகளைத் தரும்.


கடகம் - இந்த நேரத்தில் நீங்கள் சில நோய்களால் பாதிக்கப்படலாம். பண பரிவர்த்தனையில் கவனமாக இருக்கவும். தொழிலில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். சனிக்கிழமையன்று சனிபகவான் சிலையின் முன் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சிவலிங்கத்தின் பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்! பிரசாதமே சாபமாகும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR