SBI Bank Alert: நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் (SBI Accountholders) கணக்கு வைத்திருந்தால், அதேநேரத்தில் நீங்கள் ஆன்லைன் (Online Transaction) பரிவர்த்தனைகளை அதிகம் மேற்கொள்பவர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. எஸ்பிஐ (State Bank of india) தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய செய்தியை ட்வீட் செய்துள்ளது. ஜூன் 21, 2020 ஞாயிற்றுக்கிழமை, ஆன்லைன் சேவை (SBI Netbanking) மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படலாம். எனவே, வாடிக்கையாளர்கள் தங்கள் ஆன்லைன் பரிவரத்தனைகளை  ஜூன் 21 க்கு முன் முடித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் ஒருவருக்கு பணத்தை (Online Fund Transfer) அனுப்ப வேண்டும் அல்லது ஆன்லைன் தொடர்பான எந்த பணிகளையும், சனிக்கிழமையன்று செய்யுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த செய்தியும் படிக்கவும் | கொரோனா காலத்தில் SBI கார்டில் சிறந்த தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் ஆப்பர் 


ட்வீட் செய்த எஸ்பிஐ :
எஸ்பிஐ (SBI) தனது சில பயன்பாடுகளை (Apps) தற்போதை சூழலுக்கு ஏற்ப மேம்படுத்தப்படுகிறது. எனவே, ஜூன் 21 அன்று வங்கியின் ஆன்லைன் (SBI Online Services) சேவைகளை அணுகுவதில் சிரமம் இருக்கலாம். இந்த சிரமத்தைத் தவிர்க்க வாடிக்கையாளர்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று ட்வீட்டில் தெரிவித்துள்ளது. 


 



 


ஜூன் 13-14 அன்று, வாடிக்கையாளர்களுக்கு சிரமம் இருந்தது:
முன்னதாக ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் (SBI Customer) ஆன்லைன் பரிவர்த்தனைகளில் சிக்கல்களை எதிர்கொண்டனர், அதன் பிறகு வாடிக்கையாளர்களும் வங்கியில் புகார் செய்தனர். எனவே இந்த முறை வங்கி ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கான வசதிகளை நாங்கள் முழுமையாக கவனித்துக்கொள்வோம் என்று வங்கி தெரிவித்துள்ளது.


இந்த செய்தியும் படிக்கவும் | SBI மற்றும் ICICI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மோசமான செய்தி காத்திருக்கிறது...


வாடிக்கையாளர்களுக்கான புதுப்பிப்புகள்:
இருப்பினும், சிறிது நேரம் கழித்து வாடிக்கையாளர்களின் பிரச்சனையை வங்கி சரி செய்த. இதன் பின்னர், எஸ்பிஐ தனது இணைய (SBI Internet Banking) வங்கி சேவை மீண்டும் தொடங்கியுள்ளது என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவித்தது. ஆனால் எஸ்பிஐ யோனோ பயன்பாட்டின் சேவை இன்னும் சரியாக செயல்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.


இந்த செய்தியும் படிக்கவும் | SBI வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு; உங்கள் EMI தொகையில் மாற்றம் ஏற்படலாம்...


ஆன்லைன் பரிவர்த்தனை:
ஆன்லைன் பரிவர்த்தனைகளான Paytm, UPI, YONO SBI பயன்பாடு, எஸ்பிஐ இணைய வங்கி சேவை மூலம் வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை மேற்கொள்ள சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று எஸ்பிஐ (SBI) தெரிவித்துள்ளது. பராமரிப்பு காரணமாக ஆன்லைன் சேவைகள் நிறுத்தப்பட்டதாக வங்கி தெரிவித்துள்ளது.