கொரோனா காலத்தில் SBI கிரெடிட் கார்டில் சிறந்த தள்ளுபடி சலுகை மற்றும் கேஷ்பேக் ஆப்பர்

உங்களிடம் SBI கிரெடிட் கார்டு இருந்தால், உங்களுக்கு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. இந்த கார்டு மூலம் பல பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்கலாம். எங்கு எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்

Written by - ZEE Bureau | Last Updated : Jun 15, 2020, 08:12 AM IST
கொரோனா காலத்தில் SBI கிரெடிட் கார்டில் சிறந்த தள்ளுபடி சலுகை மற்றும் கேஷ்பேக் ஆப்பர்

SBI Credit Card: உங்களிடம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ - SBI) கடன் அட்டை இருந்தால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit Card) தள்ளுபடி சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். எஸ்பிஐ கார்டு (SBI Card)சார்பாக வாடிக்கையாளருக்கு உடனடி தள்ளுபடி, சலுகை மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பொம்மைகள் மற்றும் ஆபரணங்கள் வாங்குவதன் மூலம் உங்கள் பணத்தை மிச்சப்படுத்தலாம்.

ஸ்பென்சர் கடையில் கேஷ்பேக் பெறுதல்

நீங்கள் ஸ்பென்சர் கடையில் எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit Card offer) மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் கிடைக்கும். ஆம், ஷாப்பிங் குறைந்தது 2000 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்க வேண்டும். இந்த சலுகை 14 ஜூன் 2020 வரை மட்டுமே.

மேலும் செய்தி படிக்க | வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு "Bank Virus" குறித்து SBI எச்சரிக்கை..!!

பொம்மைகளுக்கும் தள்ளுபடி (Toy & Sports offers)

நீங்கள் http://hamleys.in க்குச் சென்று, எஸ்பிஐ கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்தி பொம்மைகள் மற்றும் விளையாட்டு பொருட்களை வாங்கினால், நீங்கள் 15 சதவீத முழுமையான தள்ளுபடியைப் பெறலாம். இந்த தள்ளுபடி 2020 ஜூன் 9 முதல் 2021 மே 31 வரை.

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி (Amazon Offers)

எஸ்பிஐ கிரெடிட் கார்டு (SBI Credit Card) மூலம் அமேசானில் (Amazon) எலக்ட்ரானிக்ஸ் சாமான்கள் வாங்கினால், உங்களுக்கு 10 சதவீதம் உடனடி தள்ளுபடி கிடைக்கும். இதற்காக, குறைந்தது 5000 ரூபாய் வரை ஷாப்பிங் செய்ய வேண்டும். இந்த சலுகை 2020 ஜூன் 14 வரை மட்டுமே.

மேலும் செய்தி படிக்க | வங்கி விவரங்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்; எச்சரிக்கும் SBI வங்கி...

சாம்சங் கடைக்கு தள்ளுபடி கிடைக்கும் (Samsung Electronics)

நீங்கள் சாம்சங் (Samsung) கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கினால் நுகர்வோர் பொருட்களுக்கு 10 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம். இதற்கு, குறைந்தபட்ச ஷாப்பிங் தொகையின் பரிவர்த்தனை அவசியம்.

சவுன்ட் சிஸ்டம் வாங்கினால் தள்ளுபடி

எஸ்பிஐ (State Bank of India) கிரெடிட் கார்டுடன் சவுன்ட் சிஸ்டம் (NOISE) தயாரிப்பு பொருட்களுக்காக நீங்கள் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு ரூ.750 வரை தள்ளுபடியைப் (SBI Credit Card discount offer) பெறலாம். இதற்காக, ஷாப்பிங் குறைந்தது 3000 ரூபாயாக இருக்க வேண்டும்.

More Stories

Trending News