New Digital Payment Platform: டிஜிட்டல் கட்டண தளத்தை உருவாக்க புதிய நிறுவனங்களின் நுழைவுக்கு ரிசர்வ் வங்கி (RBI) தற்போது தடை விதித்துள்ளது. முன்னதாக, ஆன்லைன் பரிவர்த்தனைகளில் இந்திய தேசிய கொடுப்பனவு கவுன்சிலின் (NPCI) ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர புதிய நிறுவனங்களை ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது. ஊடக அறிக்கையின் படி, இப்போது தரவு பாதுகாப்பு காரணங்களை மனதில் கொண்டு, ரிசர்வ் வங்கி அதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'புதிய டிஜிட்டல் கட்டணத் திட்டம்'


கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஒரு புதிய கட்டண நெட்வொர்க்கைத் தயாரிக்க ஆர்வமுள்ள நிறுவனங்களிடமிருந்து EOI களை (Expressions of Interest) கோரியது. அதைத் தொடர்ந்து, அமேசான், கூகுள் (Google), பேஸ்புக் மற்றும் டாடா குழுமத்தின் தலைமையில் குறைந்தது ஆறு கூட்டமைப்புகள் அல்லது குழுக்கள் ஒரு புதிய New Umbrella Entities (NUEs) உரிமத்திற்கு விண்ணப்பித்தன.


இந்த நிறுவனங்கள் இதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கியுடன் கூட்டு சேர்ந்துள்ளன. எனினும், பொதுத்துறை வங்கிகளான இந்திய ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை NPCI இல் பங்குதாரர்களாக இருந்ததால் நிதி அமைச்சகத்தில் சேர தடை விதிக்கப்பட்டது.


தரவு பாதுகாப்பு குறித்து ஆர்பிஐ கவலை கொண்டுள்ளது


வெளிநாட்டு நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தரவு பாதுகாப்பு பிரச்சினை பெரும் ஆபத்தாக இருப்பதாக ரிசர்வ் வங்கி கருதுகிறது. ஆகையால், புதிய உரிமத்துடன் தொடர வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.


ALSO READ: RBI New Rule: Cheque கொடுக்கும் முன் இதை தெரிந்து கொள்ளுங்கள், மீறினால் அபராதம்!!


இருப்பினும், ஆர்பிஐ-யின் (RBI) இந்த நடவடிக்கை துவக்கத்தில் இருந்தே, வங்கி தொழிற்சங்கங்களின் விமர்சனங்களை எதிர்கொண்டது. மேலும் அரசு வங்கிகள் அகற்றப்பட்டதிலும் அவர்கள் மகிழ்ச்சியடையவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களை இந்தியாவில் கட்டண நெட்வொர்க்குகளை அமைக்க அனுமதிப்பது குறித்து தொழிற்சங்கங்கள் கவலைகளை எழுப்பியிருந்தன.


Mastercard, MobiKwik -லிருந்து பாடம்


அகில இந்திய ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) ஊழியர் கூட்டமைப்பு மற்றும் யுஎன்ஐ குளோபல் யூனியன் ஆகியவை, உரிமம் வழங்கும் செயல்முறையை ரத்து செய்து, என்பிசிஐ யை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு ரிசர்வ் வங்கியை கேட்டுக்கொண்டதாக ஜூன் மாதம் செய்தி நிறுவனம் ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டது.


சமீபத்தில், தரவு உள்ளூர்மயமாக்கல் விதிகளுக்கு மாஸ்டர்கார்டு (Mastercard) இணங்காத வழக்கும் முன்னுக்கு வந்தது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி அதை தடை செய்தது. இந்த காரணங்களால் ரிசர்வ் வங்கி NUE திட்டங்களை மறுபரிசீலனை செய்யக்கூடும்.


Mastercard, Amex மற்றும் Diners Club போன்ற உலகளாவிய கொடுப்பனவு நிறுவனங்கள், விதிகள் வழங்கப்பட்டு மூன்று வருடங்கள் ஆன பிறகும் இந்திய விதிமுறைகளுக்கு இணங்க, தேவையான சான்றிதழ் அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறிவிட்டன. அது மட்டுமில்லாமல், மொபிக்விக் மற்றும் பிக்பாஸ்கெட்டின் சமீபத்திய தரவு மீறல்கள், ரிசர்வ் வங்கியின் கட்டண பரிவர்த்தனைகளை நிர்வகிக்க தனியார் துறையை அனுமதிப்பதில் உள்ள அபாயங்களை மேலும் தெளிவாக்கியிருக்கலாம்.


ALSO READ: RBI Penalty: தனலட்சுமி வங்கிக்கு 27.5 லட்சம் அபராதம் விதித்தது RBI


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR