அடிக்கடி திடீரென பயணம் செய்ய வேண்டியிருக்கும், அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரயில்வே காத்திருப்பு டிக்கெட் எடுக்க வேண்டும்.  அப்படி பதிவு செய்யப்பட்ட உங்கள் ரயில் டிக்கெட் உறுதிப்படுத்தப்படுமா இல்லையா என்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.  இனிமேல் எளிதாக அதனை கண்டறிய ஒரு செயல்முறையை பற்றி இங்கே காண்போம்.  இந்திய ரயில்வே அதன் பயணிகளை பயணத் தேதிக்கு 4 மாதங்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது.  ஆனால் பல முறை அவசர காலங்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது, அத்தகைய சூழ்நிலையில் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைக்கவில்லை, இந்நிலையில் மக்கள் காத்திருப்பு டிக்கெட்டுகளை எடுக்கின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | BSNL Recharge plan: 80 ஜிபி டேட்டா மற்றும் 80 நாட்கள் வேலிடிடி ரூ 399 ரீசார்ஜ் ப்ளான்


ஆனால் பயணிகளின் மனதில் அவர்களின் டிக்கெட் உறுதி செய்யப்படுமா? இல்லையா? என்பது தெளிவாகத் தெரியவில்லை.  பயணிகளின் வசதிகென்று தற்போது ஐஆர்சிடிசி ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் உங்கள் காத்திருப்பு டிக்கெட் உறுதி செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.  இதற்கு உங்கள் காத்திருப்பு டிக்கெட்டின் பிஎன்ஆர் எண்ணை மட்டும் வைத்திருக்க வேண்டும்.  தற்போது இதனை பின்வரும் படிநிலைகளை பயன்படுத்தி சரிபார்த்து கொள்ளலாம்.


- முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்தைப் பார்க்க வேண்டும்.


- பிறகு உங்கள் ஐஆர்சிடிசி பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் மூலம் லாக் இன் செய்ய வேண்டும்.


- பிறகு உங்கள் ஸ்க்ரீனில் ஒரு புதிய பக்கம் திறக்கும்.


- பிறகு, 'உறுதிப்படுத்தல் வாய்ப்பைப் பெற இங்கே கிளிக் செய்க' என்ற விருப்பத்தை நீங்கள் கிளிக் செய்ய வேண்டும்.


- இப்போது உங்கள் திரையில் ஒரு புதிய பக்கம் திறக்கும்.


- அதில் உங்கள் ரயில் டிக்கெட்டின் உறுதிப்படுத்தலை பார்க்கலாம்.



ஐஆர்சிடிசி சமீபத்தில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான விதிகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளது.  இதுவரை நீங்கள் ஆதார் அல்லாத இணைப்புக் கணக்கின் மூலம் 6 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும், அந்த நிலை தற்போது அது 12 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம் ஆதார் இணைப்பு கணக்கில் இருந்து இதுவரை 12 டிக்கெட்டுகளை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்று இருந்த நிலை மாறி தற்போது 24 டிக்கெட்டுகள் வரை பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.


மேலும் படிக்க | SBI ATM: பணம் எடுப்பதற்கான கட்டணங்களில் மாற்றம், முழு விவரம் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR