சென்னை: வீட்டிற்கு குடிநீர் இணைப்பு வேண்டும் என்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் இது. வீட்டிற்கு பிரத்யேக நீர் இணைப்பு பெறுவதற்கான நடைமுறை என்ன என்பதை தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் குடிநீர் இணைப்பு கோரி, விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள்ளும், தொழில் நுட்ப காரணங்களால் சிரமம் இருந்தால், ஒரு மாதத்திற்குள் இணைப்பு வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. குடிநீர் இணைப்பு வழங்குவதில் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. 


புதிய குடிநீர் இணைப்புக்கான படிவம், சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும், இப்படிவத்தில் டெபாசிட் கட்டணம்,  வீட்டு பயன்பாடு, வீட்டு பயன்பாடு அல்லாதவை, நகராட்சிக்கு செலுத்தும் கட்டணங்கள் என கட்டணம் தொடர்பான தேவையான விவரங்கள் இருக்கும். 


Also Read | Amazon Prime உறுப்பினர்களுக்கு வெறும் ரூ.2-ல் கிடைக்கும் இந்த சேவைக்கான மெம்பர்ஷிப்


இங்கு விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, விண்ணப்பப் படிவத்துடன் தேவையான தகவல்கள் மற்றும் ஆவணங்களுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்.
குடிநீர் இணைப்பு கட்டணம், இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடும்.


உதாரணமாக, 30 மீட்டர் நீள கருங்கல் ஜல்லி சாலையாக இருந்தால் 1,050 ரூபாய், தார் ரோட்டிற்கு 2,250, சிமென்ட் ரோட்டிற்கு 2,600, 30 மீட்டர் முதல் 90 மீட்டர் நீளம் வரை கருங்கல் ஜல்லி ரோட்டிற்கு 1,650, சாலைக்கு 2,850, சிமென்ட் போடப்பட்ட சாலைக்கு 3200 ரூபாய் என கட்டணம் விதிக்கப்படும். இது, தண்ணீருக்கான குழாய் இணைப்பு கொடுப்பதற்காக அரசு செய்யும் பணிகளுக்கான செலவு என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read | 7th pay commission தொடர்பான புதிய செய்திகள்! LTA காலக்கெடு நீட்டிப்பு


நகராட்சி துணை விதிப்படி மேற்பார்வை கட்டணம், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை போன்றவையும் உண்டு. இதற்கான செலவு விபரத்தை நகராட்சி வசூல் மையத்தில் உள்ள தகவல் பலகையில் பொதுமக்களுக்கு தெரியும்படி எழுதியிருக்கும். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் காத்திருப்பு பட்டியலில் இருந்தால், இணைப்பு கிடைப்பதற்கு சற்று காத்திருக்க வேண்டியிருக்கும்.   


குடிநீர் இணைப்பு கோரி விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பதாரர் குடிநீர் இணைப்பை பெறுவதற்கு தேவையான குழாய்களை பதித்து விட்டு, மாநகராட்சி, நகராட்சி பொறியாளருக்கு அதனை எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். விண்ணப்பதாரரிடம் இருந்து முறையான தகவல் பெற்றவுடன், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக வந்து சரிபார்த்து, புதிய குடிநீர் இணைப்பை வழங்குவார்கள்.


தமிழ்நாடு அரசு, சென்னை மாநகர் நீங்கலாக மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளுக்கு  குடிநீர் திட்டங்கள் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை சட்டபூர்வமான ஒரு நிறுவனமாக தோற்றுவித்தது. 


Also Read | KTM 250 Adventure விலையில் பெரும் தள்ளுபடி, ஆகஸ்ட் 31 வரை


தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு கொடுப்பது போன்ற பணிகளை மேற்கொள்கிறது.


மத்திய நீர்வள மேம்பாடு அமைச்சகத்தின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் 2024ம் ஆண்டுக்குள் செயல்பாட்டு வீட்டுக் குழாய் இணைப்புகள் ((FHTCs) திட்டத்தின் மூலம் பாதுகாப்பான குடிநீரை வழங்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல்களை ஏற்கனவே அனுப்பியிருந்தது. 


இதற்காக கடந்த ஆண்டு தமிழகத்திற்கு ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ், 917.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்காக, மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. எனவே, 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் பரவலாக அனைவரின் வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கிடைத்துவிடலாம்.


Also Read | Ola-Uber ஓட்டுநர்கள் சவாரியை ரத்து செய்தால் புகாரளிப்பது எப்படி?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR