குருவின் இந்த சஞ்சாரத்தால் 3 ராசிகளுக்கு இக்கட்டான நேரம்: நீங்களும் இந்த ராசியா?
பல நல்ல காரியங்களுக்கு அதிபதியாக இருக்கும் குருவின் அஸ்தமனத்தால் சுப காரியங்களில் சிறிது காலம் இடைவேளை ஏற்படக்கூடும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரங்களின் அமைப்பும், அவற்றின் ராசி மாற்றத்தின் பலனும் மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. ஜோதிடத்தில், வியாழன், அதாவது குரு பகவான், கடவுள்களின் குருவாகக் கருதப்படுகிறார்.
பிப்ரவரி 22ஆம் தேதி தேவகுரு வியாழன் அஸ்தமிக்கிறார். 23 மார்ச் 2022 வரை அவர் இந்த நிலையில் இருப்பார். தேவகுருவின் அமைவு அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், 3 ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். இவை எந்த ராசிகள் என இங்கே காணலாம்.
பல பணிகளில் தாக்கம் ஏற்படும்
ஜோதிடத்தில் (Astrology), வியாழன் கிரகம் திருமண வாழ்க்கை, மதம், கர்மா, நல்ல அதிர்ஷ்டம், செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறது. பல நல்ல காரியங்களுக்கு அதிபதியாக இருக்கும் குருவின் அஸ்தமனத்தால் சுப காரியங்களில் சிறிது காலம் இடைவேளை ஏற்படக்கூடும். இந்த காலத்தில் முடி கொடுக்கும் நிகழ்வு, உபநயனம், திருமஞ்சனம், நாமசங்கீர்த்தனம் போன்ற சுப காரியங்களை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எந்தெந்த ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் இருக்கும்?
வியாழனின் அஸ்தமன காலத்தில் கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களின் (Zodiac Signs) பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும். இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், புதிய நிதி முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இது தவிர, எந்த விதமான சர்ச்சைகளும் வராமல் இருக்க இந்த ராசிக்காரர்கள் தங்கள் பேச்சிலும் நடவடிக்கையிலும் கவனமாக இருப்பது நல்லது.
ALSO READ | Luky Zodiacs: அடுத்த 30 நாட்களுக்கு பொன்னான வாய்ப்பு பெறும் 5 ராசிக்காரர்கள்!
ஜோதிடத்தில் வியாழனின் முக்கியத்துவம் என்ன?
குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குகிறார். இவர் கடகத்தில் உச்சத்திலும், மகர ராசியில் கீழ் நிலையிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது. இது தவிர, 27 ராசிகளில், விசாகம், புனர்பூசம் ஆகிய ராசிகளுக்கும் இவரே அதிபதி. குரு பகவானின் அருளால்தான் மனிதர்கள் சத்தியப் பாதையில் செல்கிறார்கள்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ | சுக்ரனின் இடமாற்றத்தால், சில ராசிகளுக்கு கொண்டாட்டம், சிலருக்கு திண்டாட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR