கட்டுக்கடங்காமல் காதல் செய்யும் 4 ராசிக்காரர்கள்
வாழ்க்கையில் மகிழ்ச்சியான, ஆதரவான, அன்பான காதல் துணை கிடைத்து விட்டால், ஒவ்வொருவரின் வாழ்வும் சொர்க்கமாகிவிடும்.
புதுடெல்லி: ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி கனவு காண்கிறார்கள், தங்களுக்குப் பிடித்த துணையைப் பெற விரும்புகிறார்கள். ஆனால் சிலமுறை காதல் துணை கிடைத்தும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் போகிறது. அதே நேரத்தில், சிலர் காதல் துணையின் கரம் பிடிக்க எந்த எல்லைக்கும் செல்ல துணியமாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் பெரும்பாலும் காதல் திருமணத்தை மட்டுமே செய்து கொள்கிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த 4 ராசிக்காரர்கள் கட்டுக்கடங்காமல் காதல் செய்து திருமணம் செய்துக்கொள்வார்கள். அவர்களின் விவரத்தை காண்போம்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் காதல் விவகாரத்தில் ஈடுபாடுடன் இருப்பார்கள். அதுமட்டுமின்றி, தங்கள் காதலை பெற எவ்வித எல்லையும் கடக்க துணியமாட்டார்கள்.
மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும்
கடகம்: கடக ராசிக்காரர்கள் தங்கள் துணையிடம் மிகவும் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் இருப்பார்கள். அவர்கள் தங்கள் துணையை மிகவும் நேசிக்கிப்பார்கள் மற்றும் கவனித்துக்கொள்வார்கள். எல்லாவற்றையும் தியாகம் செய்து தயாராகிவிடுவார்கள்.
கன்னி: கன்னி ராசி உள்ளவர்கள் அன்பு மட்டும் இல்லாமல் கடமை உணர்வும் கொண்டவர். காதலையும், அன்பையும் யோசித்து செயல்படுபவர். காதலையும், அன்பையும் உடலால் இல்லாமல் மனதளவில் நினைப்பவர்.
கும்பம்: கும்பம் ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள் ஆனால் அதே சமயம் பிடிவாத குணமும் உடையவர்கள். இவர்கள் பொதுவாக உண்மையான காதலராக இருப்பர். ஆனால் காதல்தான் வாழ்க்கை என்ற அளவிற்கு அவர்களிடம் முக்கியத்துவம் இருக்காது. காதலைப் பற்றி இவர்கள் கற்பனை செய்து வைத்திருப்பர்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு இன்று அடித்தது ஜாக்பாட்: பண மழை, அன்பு மழை பொழியும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR