அடுத்த 15 நாட்கள் இந்த 6 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்
சந்திர கிரகணம் சில மணிநேரங்கள் நீடித்தாலும் அதன் விளைவு பல நாட்கள் இருக்கக்கூடும்.
புதுடெல்லி: 2021ம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் (Chandra Grahan 2021) நேற்றுடன் முடிவடைந்தது. இது அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல பலனையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்தியது. அதன் தீய விளைவுகளைத் தவிர்க்க, மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் ஜோதிட சாஸ்திரப்படி கிரகணம் முடிந்த பிறகும் அதன் எதிர்மறை பலன் 15 நாட்களுக்கு இருக்கும். இதனால், மக்களின் வாழ்வில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நவம்பர் 19-ம் தேதி ஏற்பட்ட இந்த கிரகணம், அடுத்த 15 நாட்களுக்கு 12 ராசிகளில் பாதி பேருக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில், இந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்: சந்திர கிரகணத்திற்குப் பிறகும் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணப் பிரச்னை இருந்து கொண்டே இருக்கும். உறவு விஷயத்திலும் கவனமாக இருக்கவும். பதற்றம் இருக்கலாம்.
ALSO READ: சாமுத்திரிகா சாஸ்திரம்: உங்கள் உடலின் ‘இந்த’ பாகங்கள் துடிக்கிறதா; எச்சரிக்கை!
ரிஷபம்: ரிஷப ராசியில் மட்டுமே சந்திரகிரகணம் ஏற்பட்டது. எனவே, இந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அடுத்த 15 நாட்களுக்கு உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். யாரிடமும் அதிக பற்று கொள்ளாதீர்கள்.
மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு இந்தக் காலகட்டத்தில் கடின உழைப்புக்குரிய பலன்கள் முழுமையாக கிடைக்காது. செய்யும் வேலையும் தடைபடும். டென்ஷன் இருக்கும். பட்ஜெட்டை பார்த்து செலவு செய்யுங்கள்.
துலாம்: துலாம் ராசிக்காரர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். விபத்துகள் ஏற்படலாம், கவனமாக இருக்கவும். தேவையில்லாத விரக்தி உணர்வு ஏற்படும். உறவுகளில் தவறான புரிதல்கள் அல்லது சந்தேகங்களைத் தவிர்க்கவும்.
விருச்சிகம் (Scorpio): பண இழப்பு ஏற்படலாம். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம். கூட்டாண்மையில் கவனமாக இருங்கள். குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம். மதிப்பு இழக்கப்படலாம். முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
கும்பம்: டென்ஷன் அதிகரிக்கும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
ALSO READ: திருவண்ணாமலை தீபம் குறித்த இந்த முக்கியத் தகவல்கள் தெரியுமா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR