Valentine Zodiac: காதலில் பட்டையைக் கிளப்பும் ஆண்களின் ராசிகள்
இந்த இரண்டு கிரகங்களின் தாக்கம் கொண்ட ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்! பெண்களை ஈர்க்கும் ராசிக்கார ஆண்கள் இவர்கள்... காதலில் கொடிகட்டிப் பறக்கும் ஆண்களின் ராசிகள்...
புதுடெல்லி: காதலர் தினம் என்பது ஆண்டில் ஒரு நாள் மட்டுமா? குறியீடாக ஒரு நாள் அனுசரிக்கப்படுகிறது. ஜோதிடத்தின் படி, ஒரு சுப கிரகத்தின் தாக்கத்தால், காதலில் கொடிகட்டிப் பறக்கும் பெண்களின் ராசிகளும் உண்டு. இந்த ராசிப் பெண்கள் வாழ்க்கையை முழுமையாக
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஆண்களின் ஜாதகத்தில் இரண்டு கிரகங்கள் சுப நிலையில் இருந்தால், அவர்கள் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளனர். இந்த இரண்டு கிரகங்கள் எவை என்பது நமக்குத் தெரியும்.
சுக்கிரன்
சுக்கிரன் காதல் மற்றும் சுகமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைக்கும் கிரகம். ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்றுள்ள ஆண்கள், எல்லாத் துறைகளிலும் புத்திசாலிகளாக இருப்பார்கள். அவர்கள் மிகவும் கவர்ச்சிகரமான உருவம் கொண்டவர்கள். அவருடைய ஒவ்வொரு செயலும் அனைவரையும் கவரும்.
அனைவரையும் கவரும் என்றாலும், பெண்களையும் ஈர்க்கும் சுக்கிரனின் தாக்கம் பெற்ற ஆண்கள் காதலில் மன்னர்கள். அதுமட்டுமின்றி காதலில் நிறைவு பெறும் இவர்கள் சொகுசு வாழ்க்கையையும் அனுபவிக்கின்றனர்.
சுக்கிரனின் பூரண அருள் பெற்றவர்கள், சுகபோக வாழ்வை மட்டுமல்ல, வியாபாரத்திலும் நிறைய முன்னேற்றம் அடைவார்கள். அப்படிப்பட்டவர்கள் மீது சுக்கிரனுடன் (Venus Zodiac) சேர்ந்து அன்னை லட்சுமியின் அருளும் நிலைத்திருக்கும். செல்வத்திற்கும் செல்வாக்கிற்கும் சொல்வாக்கிற்கும் பஞ்சமில்லா ராசியான ஆண்கள் சுக்கிரனின் கடைக்கண் பார்வை பெற்றவர்கள்.
மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்களுக்கு காதலை சொல்ல இது சரியான நேரம்
புதன்
ஜோதிடத்தின் படி, புதன் கிரகம் பேச்சு, வணிகம் மற்றும் நகைச்சுவை உணர்வு ஆகியவற்றின் காரணியாகும். ஜாதகத்தில் புதன் கிரகம் சுப நிலையில் இருந்தால், அந்த நபரின் நகைச்சுவை உணர்வு மிகவும் சிறப்பாக இருக்கும். அத்தகையவர்கள் தங்களுடைய வல்லமையான பேச்சின் மூலம் மற்றவர்களின் இதயத்தை வெல்வார்கள்.
புதன் கிரகத்தினி தாக்கத்தில் இருக்கும் ஆண்கள், பெண்களால் விரும்பப்படுகின்றனர். கன்னி மற்றும் மிதுன ராசிக்கு அதிபதி புதன் என்ப்னதால் கன்னிகளால் விரும்பப்படும் ராசியான காதல் மன்னர்கள் மிதுனம் மற்றும் கன்னி ராசியை சேர்ந்த ஆண்கள் என்று சொல்லலாம்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன்
ஜோதிட சாஸ்திரப்படி ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் அசுப ஸ்தானத்தில் இருக்கும் போது, வாழ்க்கையில் மகிழ்ச்சியும், செழிப்பும் இருக்கும். இதனுடன், காதல் வாழ்க்கையிலும் கொடி கட்டிப் பறப்பார்கள்.
மேலும் படிக்க | செவ்வாயின் மாற்றத்தால் இந்த ராசிக்காரர்கள் காட்டில் பண மழை: உங்க ராசி என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR