Personality by Zodiac Sign: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசியின் குணாதிசயம், குணம் என அனைத்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து ராசிக்காரர்களுக்கும் நல்ல குணங்களும் உள்ளன, தீய குணங்களும் உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சில ராசிக்காரர்கள் (Zodiac Sign) இயல்பிலேயே சாந்தகுணம் உள்ளவர்களாகவும், சிலர் பிறரை அடக்கி ஆளும் குணம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இது தவிர, சில ராசிகளை சேர்ந்தவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த பதிவில், மிகவும் பிடிவாத குணம் கொண்ட, அடாவடித்தனம் அவ்வப்போது எட்டிப்பார்க்கும் ராசிக்காரர்களைப் பற்றி காணலாம். 


மேஷம் (Aries)


ஜோதிட சாஸ்திரத்தின் படி, மேஷ ராசிக்காரர்கள் இயல்பிலேயே பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேஷ ராசிக்காரர்களின் பிடிவாத குணம் மிக மோசமானது. அவர்கள் தங்கள் பிடிவாத குணத்தை சரியான திசையில் திருப்பினால், அவர்கள் வாழ்க்கையில் மிகவும் வெற்றிகரமான நபர்களாக மாற பல வாய்ப்புகளை பெறுவார்கள். 


இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதனால் தான் இந்த ராசிக்காரர்கள் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். இது தவிர, மேஷ ராசிக்காரர்களின் விடா முயற்சி காரணமாக இவர்களை வெல்வது மிக கடினம். 


ரிஷபம் (Taurus):


ரிஷப (Taurus) ராசிக்காரர்கள் எந்த ஒரு வேலையிலும் வெற்றி பெற இரவு பகலாக முழு மனதுடன் ஈடுபடுவார்கள். இந்த ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் பிடிவாத குணமுடையவர்கள். எந்த வேலையை கையில் எடுத்தாலும் அதை முடித்த பிறகுதான் மூச்சு விடுவார்கள்.


ALSO READ | Weekly Horoscope: ஆண்டின் கடைசி வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு அட்டகாசமாய் உள்ளது 


துலாம்  (Libra):


துலாம் ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். மேலும், இந்த ராசிக்காரர்களுக்கு எந்த பணியும் செய்ய முடியாத பணியாக தோன்றாது. அனைத்தையும் செய்து விடலாம் என்ற எண்ணமே கொண்டிருப்பார்கள். 


இது தவிர, அவர்களின் இயல்பு காரணமாக, அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு திருப்பத்திலும் முன்னேற்றம் அடைகிறார்கள். இதுமட்டுமின்றி, இந்த ராசிக்காரர்கள் விடா முயற்சி மற்றும் உறுதியான குணம் கொண்டவர்கள். 


விருச்சிகம் (Scorpio):


ஜோதிட சாஸ்திரப்படி விருச்சிக (Scorpio) ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையானவர்கள், புத்திசாலிகள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் ஏற்படும் சவால்களை புன்னகையுடன் ஏற்றுக்கொள்வார்கள். அதே சமயம் எடுக்கும் பணிகளில் வெற்றியையும் பெறுகிறார்கள். அவர்களின் உணர்ச்சிப்பூர்வமான இயல்புதான் அவர்களை மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்டுகிறது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)


ALSO READ | அடுத்த 2 நாட்களுக்குள் அதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிக்காரர்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR