2022-ல் குருவின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்கு பண வரவு பொழியும்

குருவின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் தேதி புதன்கிழமை குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 26, 2021, 05:02 PM IST
2022-ல் குருவின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்கு பண வரவு பொழியும் title=

புதுடெல்லி: ஜோதிடத்தை பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி போன்ற நிகழ்வுகளின் போது தன்னுடைய ராசிக்கான பலனை மிகவும் கவனிக்கின்றனர். குருவின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டில், குரு பெயர்ச்சி ஏப்ரல் 13 ஆம் தேதி புதன்கிழமை நடைபெற உள்ளது. 

ஜோதிடத்தின் படி, இந்த ராசி மாற்றத்தில், குரு அதன் சொந்த ராசியான மீனத்தில் (Pisces Zodiac) சஞ்சரிக்கும். குருவின் இந்த ராசி மாற்றத்தில் எந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிக பண வரவு எற்படுத்தி தரும் என்பதை இங்கே பார்ப்போம்.

ALSO READ | குரு பெயர்ச்சி கொட்டும் மழையில் ஆலங்குடி குருபகவானை தரிசித்த பக்தர்கள்

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குருவின் ராசி (Guru Peyarchi) மாற்றம் நன்மை தரும். குரு சஞ்சாரத்தின் போது நீங்கள் பெரும் நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். இது தவிர, தொழில் ரீதியாகவும் அபரிமிதமான பலன்கள் உண்டாகும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருக்கும். மேலும், இந்த ராசிக்காரர்கள் பல வருமான அதாயங்களை பெறுவார்கள். 

தனுசு: குருவின் ராசி மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். பயணத்தின் போது உத்தியோகத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். மேலும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். இந்த ராசிக்காரர்கள் வியாழன் கிரகத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். ஒவ்வொரு செயலிலும் வெற்றி காணப்படும்.

கும்பம்: குருவின் சஞ்சாரம் கும்ப ராசிக்காரர்களுக்கும் சாதகமாக இருக்கும். குரு பெயர்ச்சி மீன ராசியில் சஞ்சரிப்பதால் இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இதனுடன், புதிய வருமான ஆதாரங்களும் உருவாக்கப்படும். இது தவிர வியாபாரத்தில் தினசரி வருமானம் அதிகரிக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கும் உடனடியாக வேலை கிடைக்கும்.

ALSO READ | ஜோதி வடிவாய் அருளும் ஈசனின் 12 ஜோதிர்லிங்கங்களின் சிறப்புகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News