‘இந்த’ ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டுமாம்..! அந்த அதிர்ஷ்டக்கார ராசி யாருக்கு இருக்கு..?
ஒரு சில ராசிக்காரர்களுக்கு செல்வம் இவர்களை தேடி வருமாம். அவ்வளவு கொடுத்து வைத்த ராசியை சேர்ந்தவர்கள் யார்..?
பணத்தேவைகள் என்பது எல்லோருக்குமே உள்ளது. இதில் ஒரு சிலர் பணத்தை தேடி செல்வர். ஆனால் ஒரு சிலரின் விஷயங்களில் பணமே இவர்களை தேடி வரும். அந்த கொடுப்பினை ஒரு சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே இருக்கும். அவர்கள் யார்..?
பண வரவு..
அனைவருமே சம்பாதிக்க வேண்டும் என்றால் உழைக்கத்தான் வேண்டும். ஒரு சிலர் அதிகம் சம்பாதிக்க குறைவாக உழைத்தால் போதும். ஒரு சிலருக்கு அந்த உழைப்பு கூட இல்லாமல் பண வரவு வந்து சேரும். இது சில ராசிகளுக்கு மட்டுமே சாத்தியம்..! யார் அந்த அதிர்ஷ்டம் பெற்ற ராசிக்காரர்கள் தெரியுமா..?
மேஷம்:
தங்கள் உணர்ச்சிகளை தங்கள் கைகளில் வைத்துக்கொண்டு நகரும் தன்மை உடையவர்கள், மேஷ ராசிக்காரர்கள். தங்களுக்கான பாதைகளை அமைத்துக்கொள்ள ரிஸ்க் எடுக்கும் ராசிக்காரர்களுள் இவர்களும் ஒருவர். மணிக்கணக்கில் கடுமையாக உழைத்து பணம் சேர்ப்பதற்கு பதிலாக புத்திசாலித்தனமாகச் செயல்படுவது எப்படி என இவர்கள் யோசிப்பர். அவர்களின் செயலில் முடிவெடுக்கும் தரம் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்தும் மற்றொரு பண்பு. இதனால் இவர்களின் வாழ்க்கையில் இன்பங்களும் செல்வங்களும் பெருகும்.
ரிஷபம்:
பணக்கார ராசிகளுள் ரிஷப ராசிக்காரர்களும் இருக்கின்றனர். இவர்களுக்கு அதிர்ஷ்ட தேவதை எப்போதும் கூடவே இருப்பார். மிகவும் ரிச்சான வாழ்க்கை வாழ வேண்டும் என்பது இவர்களது குறிக்கோளாக இருப்பதால், ரிஷப ராசிக்காரர்கள் எப்போதும் தங்கள் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டே இருப்பார்களாம். இவர்களுக்கு தங்கள் பணத்தை எந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வேண்டும், அந்த பணம் எந்த வகையில் கைக்கு திரும்ப வரும் என்பது போன்ற பல வித்தைகள் தெரியும். ஆனாலும் பண விஷயங்களில் உஷாராக இருப்பர், அதனால் இவர்களுக்கு ஏழ்மை நிலை என்பதே வராது என சொல்லப்படுகிறது.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களின் ஆழ் மனதில் எப்போதும் பணக்காரனாக வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருக்குமாம். அதனால் இவர்கள் சம்பாதிக்கும் எண்ணத்துடன் சுற்ருக்கொண்டிருப்பர். இவர்கள் மார்கெட்டிங், ஃபைனான்ஸ் போன்ற துறைகளில்தான் முன்னோடிகளாக இருப்பார்களாம். தங்களின் கனவில் இருந்து எப்போதும் விலகாமல் ஒரே ட்ராக்கில் கடிவாளம் போட்டது போல ஓடிக்கொண்டிருப்பர். இருக்கும் செல்வத்தை வைத்தே பணக்காரன் போல பந்தா காட்டுவதிலும் இவர்கள் திறமை சாலிகள் என கூறப்படுகிறது. ஒரு சில சிம்ம ராசிக்காரர்கள் பிறக்கும் போதே பணக்காரர்களாகத்தான் பிறப்பார்களாம். அதற்கு ஏற்றார் போல இவர்களது வாழ்வில் செல்வத்திற்கு குறை இல்லாமல் இருக்கும்.
கன்னி:
அற்பத்தனத்தில் திருப்தியடையாத ஒரு ராசியாக இருப்பவர்கள் கன்னி ராசிக்காரர்கள். தங்கள் வெற்றிக்கான பாதையைத் தடுக்கும் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றியமைத்து மேம்படுத்துபவர்கள் இவர்கள். அவர்களில் பெரும்பாலோர் தங்கள் முன்னோர்களின் பரம்பரையில் தங்கியிருப்பதை விட பொருளாதார பாதுகாப்பை அடைய கடுமையாக முயற்சிப்பதால், அவர்கள் சில சமயங்களில் நிதி அபாயங்களை எடுக்கவும், தங்கள் செல்வத்தின் பெரும்பகுதியை சேமிக்கவும் தயாராக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளில் நேர்மையாகவும் இருப்பார்கள். தவறான வழிகளில் எப்போதும் சம்பாதிக்க மாட்டார்கள்.
வெற்றியின் உச்சத்தை அடைந்தாலும், கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகவும் தன்மையுடன் இருப்பார்கள். அவர்கள் தேவைப்படும் நண்பர்கள் விரும்புவர். கன்னி ராசிக்காரர்கள் ஆடம்பரங்களில் ஈடுபடுபவர்கள் அல்ல, அதற்குப் பதிலாக ஓய்வுக்குப் பிறகு அல்லது எதிர்பாராத விபத்துக்கு என அனைத்திற்கும் இவர்கள் பணத்தை சேமித்து வைப்பார்கள்.
மேலும் படிக்க | பிஎஃப் ஊழியர்களுக்கு குட் நியூஸ்! 83,000 ரூபாய் உங்களின் கணக்கில் வரும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ