கார் லோன் வாங்க போறீங்களா? இந்த விசயத்தை மறந்துடாதீங்க!
கார் லோனுக்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால் அதற்கு பான் கார்ட், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பில்கள் அல்லது வங்கி பாஸ்புக் போன்ற அடையாள சான்றுகளை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
குறைந்த தொகையை கையில் வைத்துக்கொண்டு எந்தவித வாகனங்களையும் வாங்குவது இப்பொழுது சுலபமான ஒன்றாக மாறிவிட்டது, அதற்கு காரணம் கார் கடன்கள் தான். கார் கடன்கள் கிடைப்பதால் நாம் குறைந்த தொகையை வைத்துகூட காரை வாங்கி தவணை முறையில் பணத்தை திருப்பி செலுத்திக்கொள்ளலாம். இப்போது பல வங்கிகளும் கார் கடன்களுக்கு பலவித சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ரிசர்வ் வங்கியானது தனிநபருக்கான வீடு மற்றும் வாகனங்களுக்கு கடன் வழங்குவதை ஊக்குவித்து வருகிறது. ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி கொரோனாவிற்கு முன்பு இருந்ததைவிட தற்போது வாகனக் கடன்களின் வளர்ச்சி அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளது.
கார் கடனைப் பெறுவதற்கு முன் அதனை திருப்பி செலுத்த நீங்கள் தகுதியானவர் என்பதை சோதித்து கொள்ள வேண்டும். உங்களின் வயது, வருமானம், வேலை போன்ற பல தகுதிகளை பொறுத்து தான் உங்களுக்கு கடன் தொகை நிர்ணயம் செய்யப்படுகிறது. கார் கடனுக்கு நீங்கள் தகுதி பெற்றிருந்தால் உங்கள் அடையாளத்தைச் சரிபார்ப்பது அடுத்த படியாகும். அதற்கு பான் கார்ட், பாஸ்போர்ட், ஆதார் அட்டை, வாக்காளர் ஐடி, பில்கள் அல்லது வங்கி பாஸ்புக் போன்ற அடையாள சான்றுகளை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். கார் கடனுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை ஒருபுறமிக்க, கார் கடனை பெறுவதற்கு முன்னர் நாம் சில நினைவுகளை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும், அதைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
மேலும் படிக்க | மின் கட்டண எண்ணுடன் ஆதாரை இணைத்தால் மானியமா?
1) எந்தவொரு கடனையும் பெறுவதற்கு முன்னர் உங்களின் லோன் ஹிஸ்டரி கடன் வழங்குபவரால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். கிரெடிட் ஸ்கோர் தான் ஒருவருக்கு கடன் வழங்குவதை தீர்மானிக்கிறது, கிரெடிட் ஸ்கோர் நல்ல நிலையில் இருந்தால் அவர்களுக்கு உடனடியாக கடன் வழங்கப்படும். அதனால் கடன் வழங்குவதற்கு முன் உங்களது கடன்களின் எண்ணிக்கை, திருப்பி செலுத்தும் தகுதி, கிரெடிட் ஸ்கோர் ஆகியவை சரிபார்க்கப்படும், அதனால் நல்ல நிலையில் கிரெடிட் ஸ்கோர் வைத்திருக்க வேண்டும்.
2) கார் கடனுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும், கார் வைத்திருப்பதற்கு முன் நீங்கள் ஓட்டுவதற்கு சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை இது காட்டுகிறது. ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டாலோ அல்லது காலாவதியாகிவிட்டாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ உங்களுக்கு கார் கடன் ரத்துசெய்யப்படலாம்.
3) நீங்கள் வாங்க விரும்பும் கார் வகையை பொறுத்து கடன் தீர்மானிக்கப்படும், கார்களின் விலைகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். அதனால் காரின் மறுவிற்பனை மதிப்பும் கடன் வழங்குவதற்கு பரிசீலிக்கப்படுகிறது. எனவே, காரின் மறுவிற்பனை மதிப்பு அதிகமாக இருந்தால் உங்களுக்கான கடன் தொகையும் அதிகமாக கிடைக்கும்.
4) சில சமயங்களில் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரும் உங்களுக்கான கடன் தகுதியை உயர்த்தும், சில முன்னணி நிறுவங்களில் பணிபுரிபவர்களுக்கு மற்றவர்களை காட்டிலும் கடன் தொகை அதிகமாகவும் மற்றும் உடனடியாகவும் கிடைக்கும்.
மேலும் படிக்க | இனி UPI டிரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ