புகைபிடிப்பது என்பது எல்லா வயதினருக்கும் தீங்கு விளைவிக்கும் ஒரு பழக்கம். குழந்தைகளுக்கு, இது ஒரு வேடிக்கையாகத் தொடங்குகிறது. ஆனால், அது ஒரு பழக்கமாகி பின்னர் அதற்கு அடிமையாகும் நிலைக்கு கொண்டு செல்லும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நவீன காலத்தில், தங்கள் குழந்தைகள் தவறான வழியில் செல்லாமல் இருக்க, பெற்றோர்கள் அவர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.  இளைஞர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகள் இருக்க, பெற்றோர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதைக் காணலாம்.


உங்கள் குழந்தைகள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகிவிடாமல் தடுக்க, சில விஷயங்களை கடைபிடிப்பது உங்களுக்கு உதவும்.


விவாதம் முக்கியம்


உங்கள் குழந்தைகளுடன் புகைபிடிப்பதை பற்றி நட்புடன் பேசுங்கள். புகைபிடிப்பது பற்றி அவர்களுக்கு எந்த அளவிற்கு தெரியும் என்று அவர்களிடம் கேளுங்கள். மேலும், புகைபிடிப்பது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்தவும். 


சில பெற்றோர்கள், இந்த விஷயத்தை குழந்தைகளுடன் பேசுவது தவறு என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள்.  சிலர் தயக்கம் காரணமாக இது பற்றி பேசுவதை தவிர்க்கிறார்கள், ஆனால் புகைபிடிப்பது பற்றி குழந்தைகள் மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறியவும், அவர்களுக்கு அது தவறான பழக்கம், வாழ்க்கையை சீரழிக்கும் என்பதை உணர்த்தவும் ஆரோக்கியமான விவாதம் செய்வது எப்போதும் நல்லது. இதனை பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


ALSO READ | Health Tips: ‘இந்த’ உணவுகளை பாலுடன் சாப்பிடவே கூடாது; ஏன் தெரியுமா..!!


மறுப்பின் முக்கியத்துவம்


குழந்தைகள் டீன் ஏஜ் பருவத்தில் நுழையும் போது, ​​சக நண்பர்களின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும், அந்த அழுத்தத்திற்கு, தூண்டுதலுக்கு பெரும்பாலோர் அடிபணிந்து விடுகிறார்கள்.  ஆனால், அப்படி நிர்பந்திக்கப் படும் போது அதனை மறுக்க வேண்டியதன் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அவர்களை  ஊக்குவிக்க வேண்டும். உண்மையில், ஒரு பெற்றோராக நீங்கள் அவர்களிடம் 'மன்னிக்கவும், நான் புகைபிடிக்க மாட்டேன்' என்று சொல்ல ஊக்குவிக்க வேண்டும்.


ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்


மன அழுத்தம்


பல குழந்தைகள் இ-சிகரெட்டுகள் மற்றும் கேண்டி சிகரெட்டுகள், ஹூக்காக்கா போன்ற புகைபடிப்பதற்கு மாற்றாக பயன்படுத்தப்படும் பொதுவாக வழிகள் பாதுகாப்பானவை என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிஜ வாழ்க்கை உதாரணங்களை எடுத்துக் கூறி, தீவிர உடல் நலப் பிரச்சினைகள் பற்றி அவர்களுடன் பேசுங்கள். புகைப்பழக்கம் எந்த வகையில் இருந்தாலும், அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை பற்றி அவர்களுக்குப் புரியவைக்கவும். புகைபிடிகப்பவர்கள் அருகில் இருந்தாலும், அதன் மூலம் நமக்குள்ளும் புகை சென்று (Passive Smoking) அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் எடுத்து சொல்லவும். அதனால், புகை பிடிப்பவர்கள் அருகில் செல்வது கூட தவறு என்பதை உணர்த்தவும். 


ஒரு சிகரெட் கூட தீங்கு விளைவிக்கும்


உங்கள் குழந்தைகளுக்கு ஒரு சிகரெட் கூட தீங்கு ஏற்படுத்தும் என்பதை விளக்குங்கள். வேடிக்கையாக முயற்சிப்பது கூட வாழ்நாள் முழுவதும் பழக்கமாகிவிடும் என எச்சரிக்கவும். இளமைப் பருவத்தில்  ஏற்படும் பழக்கத்தை, விடுவது ஒரு சவாலான வேலை என்று அவர்களிடம் சொல்லுங்கள்.


பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைளுடன் நண்பர்களை போல, புகைபிடிப்பது தொடர்பான அனைத்து முக்கிய பிரச்சனைகளையும் கலந்துரையாடினால், அவர்களை புகைபிடிப்பதற்கு அடிமையாகாமல்  தடுப்பதோடு, அவர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை வழங்கலாம்.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR