குதிகால் வலியால் அவதிப்பட்டால், இந்த மூன்று பயிற்சியில் உடனடி நிவாரணம்..!
Heel pain causes : குதிகால் வலி யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்கள் தினமும் இந்த மூன்று பயிற்சிகளை தினசரி அடிப்படையில் செய்து வந்தால், எதிர்பார்க்கும் ரிசல்ட் நிச்சயம் கிடைக்கும்.
Latest Leg Pain Tips Tamil : குதிகால் வலி வர காரணங்கள்
குதிகால் வலி யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாக அதிக நேரம் ஹைஹீல்ஸ் காலணியுடன் இருப்பது, அதிக எடை மற்றும் உணவில் போதுமான உட்டச்சத்து இல்லாமல் இருப்பது ஆகியவறை குதிகால் வலியை ஏற்படுத்தும். ஆரம்பத்தில் இது சிறிய பிரச்சனையாகவே தோன்றும். அதனால் இந்த பிரச்சனைக்காக மருத்துவர்களிடம் செல்வதை மக்கள் தவிர்க்கிறார்கள். அதேநேரத்தில் உங்களுக்கான அன்றாட வேலையை குதிகால் வலி பாதிக்கிறது என்றால், அதனை எப்படி சரி செய்யலாம் என்பதற்கான மூன்று பயிற்சிகள் உள்ளன.
மேலும் படிக்க | புளித்த தோசை மாவை வைத்து சுவையாக ‘இதை’ செய்யலாம்..முன்னாடியே தெரியாம போச்சே!
பெல்ட் உடற்பயிற்சி -
இந்த பயிற்சியை செய்யும் முன், முதலில் இரண்டு கால்களையும் நேராக முன் வைத்து தரையில் நேராக உட்காருங்கள். பின்னர், ஒரு பெல்ட்டை எடுத்து உங்கள் கால்விரல்களுக்கு கீழே வைக்கவும், பெல்ட்டின் இரு முனைகளையும் உங்கள் கைகளில் பிடிக்கவும். இப்போது உங்கள் கால்களை முன்னும் பின்னும் வளைத்து இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். இந்த பயிற்சியை செய்வதால் கால் வலியில் இருந்து நிறைய நிவாரணம் கிடைக்கும்.
குதிகால் பயிற்சி
குதிகால் பயிற்சி என்பது, உங்கள் எடை முழுவதும் கால் விரல்களின் மேல் இருக்குமாறு வைத்து, குதிகால் தரையில் படாமல் இருப்பதை உறுதி செய்து, சில நிமிடங்கள் நிற்க வேண்டும். கால் விரல்களின் மீது உடல் எடை இருக்குமாறு வைத்து மேலும் கீழும் உந்தி உந்தி இந்த பயிற்சியை செய்யவும். ஏழு முதல் எட்டு முறை இந்த பயிற்சியை செய்தால் குதிகால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
பந்து பயிற்சி
இது ஒரு கடினமான பயிற்சி என்றாலும் குதிகால் வலிக்கு நிவாரணம் அளிப்பதில் இந்த பயிற்சி சிறந்தது. ஒரு பந்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மீது ஒருகாலை வைத்து உருட்ட வேண்டும். மற்றொரு காலுக்கும் அதேமாதிரி செய்யுங்கள். உங்களால் முடிந்தால் இரண்டு கால்களையும் பந்து மீது வைத்து முயற்சி செய்யுங்கள். இது மிக கடினம் என்றாலும் தினசரி பயிற்சி செய்யும்போது பந்து மீது நிற்பதற்கான பேலன்ஸ் கிடைக்கும், குதிகால் வலிக்கும் சீக்கிரம் நிவாரணம் கிடைக்கும்.
குதிகால் வலி யாருக்கெல்லாம் வரும்?
குதிகால் வலி அதிக நேரம் நின்று கொண்டே வேலை செய்பவர்கள், காலணி ஹீல்ஸாக அணிபவர்கள் உள்ளிட்டோருக்கு அடிக்கடி வரலாம்.
மேலும் படிக்க | உங்கள் Ex உடன் மீண்டும் காதல் உறவை தொடங்கலாமா? குழப்பமா இருந்தா இதை படிங்க..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ