ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்: காதலர் தினம் (Valentine Day) காதலர்களுக்கான தினமாக அழைக்கப்படுகிறது. இதனால் உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தில் உங்கள் காதலர் அல்லது காதலியுடன் எங்காவது பயணம் செய்ய நீங்கள் திட்டமிட்டிருந்தால், உங்களுக்காக ஐஆர்சிடிசி (IRCTC) ஒரு சிறந்த விமானப் பயணத் தொகுப்பைக் கொண்டு வந்துள்ளது. இந்த தொகுப்பின் கீழ், தாய்லாந்தில் 3 இரவுகள் மற்றும் 4 பகல்கள் பயணம் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த டூர் பேக்கேஜில் உங்களுக்கு பட்டாயா மற்றும் பாங்காக் செல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த டூர் பேக்கேஜ் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி அன்று தொடங்கும். இந்த முழு தொகுப்பிற்கும் நீங்கள் குறைந்தபட்சம் ரூ.48,470 செலவழிக்க வேண்டி இருக்கும். இந்த டூர் பேக்கேஜில், ஹோட்டல் தங்குதல், விமான டிக்கெட்டுகள், உணவு மற்றும் பானங்கள் போன்ற பல வசதிகள் வழங்கப்படும். மேலும் இந்த சிறப்பான டூர் தொகுப்பு ஹைதராபாத்தில் இருந்து தொடங்கும்.


மேலும் படிக்க | Indian Railways: இந்திய ரயில்வேயின் புதிய விதி.. RAC டிக்கெட் உள்ளவர்கள் கட்டாயம் படிக்கவும்



டூர் பேக்கேஜின் சிறப்பு அம்சங்கள் என்ன?
டூர் பேக்கேஜ் பெயர்- Treasures Of Thailand, Valentine’s Day Special Ex
இலக்கு - பட்டாயா மற்றும் பாங்காக்
சுற்றுப்பயணம் தேதி- பிப்ரவரி 14, 2024
சுற்றுப்பயணம் - 4 பகல்கள்/3 இரவுகள்
உணவுத் திட்டம் - காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு
பயண முறை - விமானம்
விமான நிலையம்/ புறப்படும் நேரம்- ஹைதராபாத் விமான நிலையம்/ 00:45 AM


டூர் பேக்கேஜின் கட்டண விவரம்:
பேக்கேஜின் விலையைப் பற்றி பேசுகையில், இந்த பயணத்தில் நீங்கள் தனியாக செல்கிறீர்கள் என்றால், அதற்கு நீங்கள் 56,845 ரூபாய் செலவழிக்க வேண்டும். இரண்டு பேர் செல்ல கட்டணமாக தலா ஒருவருக்கு ரூ.48,470 செலுத்த வேண்டும். இது தவிர மூன்று பேருடன் பயணம் செய்தால் ஒருவருக்கு ரூ.48,470 மட்டுமே செலவழிக்க வேண்டும். இந்த தொகுப்பில், படுக்கையுடன் கூடிய குழந்தைக்கு ரூ.46,575 மற்றும் படுக்கையில்லாமல் ரூ.41,550 கட்டணம் செலுத்த வேண்டும்.


Package Cost in INR:


Package Cost 
per person
(Single Sharing)

Package Cost
per person
 (Double Sharing)

Package Cost
per person
 (Triple Sharing)

Package Cost
per person
(Child with Bed)

Package Cost
per person

(Child Without Bed)

Rs 56845/-

Rs 48470/-

Rs 48470/-

Rs 46575/-

Rs 41550/-


சுற்றுப்பயணம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு, இந்த இணைப்பைப் பார்வையிடலாம் https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SBA23.


மேலும் படிக்க | WFH: வீட்டில் இருந்து வேலை பார்ப்பவரா நீங்கள்? இந்த செய்தி உங்களுக்குத்தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ