Unique Invitation: வழக்கறிஞரின் அரசியலமைப்பு கருப்பொருள் திருமண அழைப்பிதழ்
இதுவொரு புதுவித திருமண அழைப்பிதழ்... திருமணத்திற்கு அழைப்பதற்கு சட்ட ஆவணம் போல் அழைப்பிதழை வடிவமைத்த வழக்கறிஞர்...
தங்களது வித்தியாசமான செயல்களால் பலரும் மக்களைக் கவர்கின்றனர். இது வழக்கறிஞர் ஒருவரின் வித்தியாசமான ஆனால் ரசிக்க வைக்கும் திருமண உத்தி. இதை அனைவரும் பாராட்டுகின்றனர்.
மணமகன் வழக்கறிஞர் அஜய் சர்மா, உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிகிறார். இவர், ஹரித்வாரில் உதவி பேராசிரியையாக பணியாற்றிய பூஜா சர்மாவை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருக்கிறார்.
கவுகாத்தியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜய் சர்மாவின் புதுவிதமான திருமண அட்டை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த தனித்துவமான திருமண அழைப்பிதழ் ஒரு சட்ட ஆவணத்தைப் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, சமூக ஊடகங்களில் (Social Media) பலரின் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
வித்தியாசமான அழைப்பிதழில் அதிக கவனத்தை ஈர்த்துள்ள திருமணம் நவம்பர் 28 ஆம் தேதி அதாவது இன்று நடைபெற உள்ளது.
வைரலான திருமண அழைப்பிதழில், மணமகள் பூஜா சர்மா மற்றும் மணமகன் வழக்கறிஞர் அஜய் சர்மா ஆகியோரின் பெயர்கள் சமத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எழுதப்பட்டுள்ளது. திருமண அழைப்பிதழில், இந்திய திருமணங்களை நிர்வகிக்கும் சட்டங்கள் மற்றும் உரிமைகள் (Wedding Law) பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read | செக்ஸ் பொம்மையை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பாடிபில்டர்!
"திருமண உரிமை என்பது இந்திய அரசியலமைப்பின் 21 வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு அங்கமாகும். எனவே, இந்த அடிப்படை உரிமையை (Fundamental Right) நவம்பர் 28, 2021 ஞாயிற்றுக்கிழமையன்று இருவரும் பயன்படுத்த தேவையான சட்ட அனுமதி பெறு0 நிகழ்வு நடைபெறவிருக்கிறது" என்று திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"வழக்கறிஞர்கள் திருமணம் செய்து கொள்ளும்போது, அவர்கள் 'ஆம்' என்று சொல்ல மாட்டார்கள், அவர்கள் - 'விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்' என்று அவர்கள் கூறுகிறார்கள்," என்று தனித்துவமான அழைப்பிதழ் (Wedding Invitation) கூறுகிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் (Coronavirus Pandamic) காரணமாக, நண்பர்கள் மற்றும் சட்டத் துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே திருமணத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வயது வந்த இருவர் திருமண பந்தத்தில் ஒன்றிணைவதை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றி திருமண அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
READ ALSO | பொம்மையை காதலித்து திருமணம் செய்துகொண்டவர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR