மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் கர்ப்பதற்கு அனைத்து மாணவர்களுக்கும் இலவச இணைய இணைப்பை வழங்குவதாக அரசு அறிவிப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் இந்தியாவைத் தாக்கியதிலிருந்தே தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளால் சமூக ஊடகங்கள் நிரம்பி வழிகின்றன. ஆனால் இணையத்தில் நாம் படித்த அனைத்தும் உண்மை இல்லை என்ற உண்மையை நாம் மறந்துவிடக் கூடாது. இந்நிலையில், தற்போது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆன்லைன் வகுப்புகளுக்காக மாணவர்களுக்கு இலவச இணையத்தை வழங்குவதாகக் கூறும் ஒரு இடுகை வாட்ஸ்அப்பில் வைரலாகியுள்ளது.


அந்த வைரல் பதிவின் படி, தொற்றுநோய்களுக்கு மத்தியில் மாணவர்கள் பரீட்சைக்கு வர உதவும் வகையில் நாட்டின் ஒவ்வொரு மாணவருக்கும் 10GB இணைய தரவை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.


மேலும் அந்த இடுகை; “கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டதால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது, எனவே அரசாங்கம் அனைத்து மாணவர்களுக்கும் இலவச இணையத்தை (ஒரு நாளைக்கு 10GB) வழங்குகிறது. இதனால் மாணவர்கள் தங்கள் கல்வியை எந்த தடையின்றி கற்க முடியும், மேலும் இணையம் மற்றும் ஆன்லைன் வகுப்புகள் (sic) உதவியுடன் தேர்வுகளையும் வழங்க முடியும்” என குறிப்பிட்டுள்ளது. 


ALSO READ | SBI பயனர்களுக்கு ஒரு நற்செய்தி... டெபிட் கார்டில் இனி இந்த சிறப்பு வசதி கிடைக்கும்!! 


இருப்பினும், அரசாங்கம் அத்தகைய அறிவிப்பை வெளியிடவில்லை மற்றும் இந்த செய்தி போலியானது. போலி செய்திகளைத் துண்டித்து, PIB ஒரு ட்வீட்டில் எழுதியது, ”#COWID19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஆன்லைன் தேர்வுகளை வழங்கவும், கல்வியை முடிக்கவும் அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்கம் இலவச இணையத்தை வழங்குவதாக #WhatsApp செய்தியில் கூறப்பட்டுள்ளது.


#PIBFactCheck: இந்த உரிமைகோரல் #போலி. அத்தகைய எந்த முடிவும் அரசாங்கத்தால் எடுக்கப்படவில்லை” என தெளிவுபடுத்தியுள்ளது. 



இணையத்தில் நிலவும் தவறான தகவல்கள் மற்றும் போலி செய்திகளைக் கட்டுப்படுத்த PIB இன் உண்மைச் சரிபார்ப்பு தளம் 2019 டிசம்பரில் தொடங்கப்பட்டது. அதன் நோக்கம் "பல்வேறு சமூக ஊடக தளங்களில் பரவி வரும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் தொடர்பான தவறான தகவல்களை அடையாளம் காண்பது" என்று அது கூறியது.