Used Bike List in Tamil Nadu: நீங்கள் ஒரு புதிய ஸ்கூட்டியை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள். ஆனால் அதற்கான பட்ஜெட் இல்லை என்றால், கவலை வேண்டாம். குறைந்த விலையில் ஹீரோ மேஸ்ட்ரோ ஸ்கூட்டியை வாங்கிச் செல்ல சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. அதாவது நீங்கள் வெறும் 26 ஆயிரம் ரூபாய் வரை மட்டும் செலவு செய்ய வேண்டியிருக்கும். அதாவது கொரோனா காலத்தில் பலரின் பட்ஜெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய ஸ்கூட்டியை வாங்க முடியாதவர்கள்,  குறைந்த விலைக்கு செகேண்ட் ஹேண்ட் ஸ்கூட்டியை வாங்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா (Coronavirus) பரவல் அதிகரித்து வரும் நேரத்தில், முடிந்த வரை அனைவரும் சொந்த பைக், ஸ்கூட்டி அல்லது காரில் பயணம் செய்வதே சிறந்தது என்றும், அதுவே பாதுகாப்பானது என்றும் விரும்புகின்றனர். எனவே நிதி நெருக்கடி நிலவி வரும் வேளையில், பழைய பைக்குகளை வாங்குவது சிறந்தது.


ALSO READ |  பைக் காப்பீடு எடுக்கும் முன்பே இந்த 5 முக்கியமான உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்


ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டி மாடலை பற்றி பார்ப்போம்: 
இந்த ஸ்கூட்டியை புதியதாக வாங்க 55 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவிட வேண்டியிருக்கும். அதே நேரத்தில், நீங்கள் செகண்ட் ஹேண்ட் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு 26 ஆயிரம் ரூபாயில், இதே மாடல் ஸ்கூட்டி கிடைக்கும். உண்மையில், இதுபோன்ற பட்ஜெட்டில் பைக், கார் மற்றும் ஸ்கூட்டி போன்ற வாகனங்களை Olx.in, bikedekho.com மற்றும் quikr.com போன்ற பிளாட்ஃபார்ம் தளத்தில் வாங்கலாம். 


விற்பனைக்கு 2016 மாடல் ஸ்கூட்டி:
நாம் இங்கே ட்ரூமில் (droom.in) தளத்தில் விற்பனைக்கு உள்ள ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டி பற்றி பார்போம். இது 2016 மாடல் ஆகும். இந்த ஸ்கூட்டி பெட்ரோல் எரிபொருளில் இயங்கும். என்ஜின் 110 சி.சி. அதே நேரத்தில், இந்த ஸ்கூட்டி 42000 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டு உள்ளது. ஸ்கூட்டியின் மைலேஜ் 51 கி.மீ. அதன் அதிகபட்ச ஏரிசக்தி 8.31 பிஹெச்பி மற்றும் சக்கரத்தின் அளவு 12 அங்குலங்கள்.


இந்த ஸ்கூட்டியை வாங்க டிரம் (Droom) வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். இந்த வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஒப்பந்தத்தின் விவரங்களை நீங்கள் காணலாம். அதே நேரத்தில், ஸ்கூட்டி விற்பனையாளர்களைத் தொடர்பு கொள்ள நீங்கள் ஒரு சிறிய டோக்கன் தொகையை கொடுக்க வேண்டும். இந்த டோக்கன் தொகை உங்களுக்கு திருப்பித் தரப்படும். அதாவது சில காரணங்களால் ஒப்பந்தம் முடியவில்லை என்றாலும், உங்கள் பணம் திருப்பித் தரப்படும்.


ALSO READ |  Hero அளித்த good news: கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பைக், ஸ்கூட்டரை வாங்கலாம்


முக்கிய உதவிக்குறிப்புகள்: 
நீங்கள் செகண்ட் ஹேண்ட் ஸ்கூட்டி (Second Hand Scooty) அல்லது பைக்கை வாங்கப் போகிறீர்கள் என்றால், முதலில், விற்பனை இணையதளத்தில் ஒப்பந்தத்தின் விவரங்களை ஒருமுறை பார்க்கவும். இதற்குப் பிறகு, விற்பனையாளர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். விற்பனையாளர்கள் கொடுக்கப்பட்ட விவரங்களை சரிபார்ப்பது மிகவும் அவசியம். அதேபோல வாகனம் உற்பத்தி செய்யப்பட ஆண்டையும் சரிபார்க்க வேண்டும். இதன்மூலம் வாகனம் எவ்வளவு பழையது என்பதை அறிந்துக்கொள்ள முடியும். 


அதே நேரத்தில், லோன் தவணையில் ஸ்கூட்டி (Scooty) வாங்கிருந்தால், ஈ.எம்.ஐ தொகை முழுமையாக செலுத்தப்பட்டு உள்ளதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்வது அவசியம். அந்த வாகனம் மீது காவல் நிலையத்தில் ஏதாவது புகார் இருக்கிறதா என்பதையும் சரிபார்க்கவும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil  மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYe