Vastu Tips: இந்த திசையில் மட்டும் தெரியாம கூட தலை வெச்சி தூங்கிடாதீங்க
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தவறான திசையில் தூங்குவது வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
Vastu Shastra for Sleep: உறக்கம் என்பது மனித வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு அம்சமாகும். நாம் எந்த திசையில் தலை வைத்து தூங்குகிறோம் என்பதில் பல நேரங்களில் நாம் கவனம் செலுத்துவதில்லை. வாஸ்து சாஸ்திரத்தின் படி, இதனால் நமது வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உங்கள் நிதி நிலை கூட நீங்கள் எந்த திசையில் தலை வைத்து தூங்குகிறோர்கள் என்பதை பொறுத்து மாறுபடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம் (Vastu Shastra).
பல வகையான பிரச்சனைகள் வரலாம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தவறான திசையில் தூங்குவது வாழ்க்கையில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மறுபுறம், நீங்கள் உங்கள் தலையை சரியான திசையில் வைத்து தூங்கினால், உங்களுக்கு நல்ல தூக்கம் கிடைப்பது மட்டுமல்லாமல், அது உங்களை பொருளாதார ரீதியாகவும் வளமாக்குகிறது.
தெற்கு நோக்கி தலை வைத்து தூங்குங்கள்
தெற்கில் தலை வைத்து உறங்குவது (Sleep) உடல் நலத்திற்கு நல்லது. இதன் மூலம், நீங்கள் பல வகையான மனநல பிரச்சனைகளிலிருந்து விலகி இருக்கிறீர்கள். உங்கள் கால்களை தெற்கு நோக்கி வைத்து உறங்க வேண்டாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ALSO READ: Kitchen Vastu: சப்பாத்தி செய்ய கூட சாஸ்திரம் இருக்கா?
கால்களை தெற்கு திசையை நோக்கி வைத்து உறங்கினால், காந்த மின்னோட்டம் பாதங்களுக்குள் நுழைந்து தலை வழியாக வெளியேறும் என்று நம்பப்படுகிறது. இதனால் மூளையில் பதற்றம் அதிகரித்து தூக்கம் கெட்டுப்போகும், பல வித உடல் உபாதைகளும் ஏற்படும்.
கிழக்கு திசையும் மங்களகரமானதாக கருதப்படுகிறது
உறங்குவதற்கு தெற்குக்குப் பிறகு, கிழக்கு திசையும் உகந்ததாக கருதப்படுகிறது. நீங்கள் கிழக்கு நோக்கி தலை வைத்து தூங்கினால், தெய்வங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த திசையில் இருந்து சூரியன் உதிக்கிறது, எனவே கிழக்கு திசை உயிரைக் கொடுக்கும் திசையாகக் கருதப்படுகிறது. இந்த திசையில் உங்கள் கால்களை வைத்து தூங்க வேண்டாம்.
கிழக்கு திசையும் மங்களகரமானதாக கருதப்படுகிறது
உறங்குவதற்கு தெற்குக்குப் பிறகு, கிழக்கு திசையும் உகந்ததாக கருதப்படுகிறது. நீங்கள் கிழக்கு நோக்கி தலை வைத்து தூங்கினால், தெய்வங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த திசையில் இருந்து சூரியன் உதிக்கிறது. எனவே கிழக்கு திசை உயிரைக் கொடுக்கும் திசையாகக் கருதப்படுகிறது. இந்த திசையில் உங்கள் கால்களை வைத்து தூங்க வேண்டாம்.
இவர்களுக்கு பலன் கிடைக்கும்
வீட்டில் பணம் (Money) ஈட்டும் நபர்கள் எப்போதும் கிழக்கு திசையில் தலை வைத்து உறங்க வேண்டும். மாணவராக இருந்தாலும் கிழக்கு திசையில் தலை வைத்து உறங்குவது நல்லது. இது மனதை ஒருமுகப்படுத்துகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ நியூஸ் இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
ALSO READ: Vastu Tips: வாட்ச் அணியும்போது ‘இந்த’ தவறுகளை ஒரு போதும் செய்யாதீர்கள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR