Viral Video: பொண்ணு எப்டி இருந்தாலும் பரவா இல்ல.. எனக்கு கல்யாணம் பண்ணுங்க!
6 வயது சிறுவன் ஒருவன் தனக்கு திருமணம் செய்ய பெண் பார்க்குமாறு தனது தாயிடம் கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது..!
6 வயது சிறுவன் ஒருவன் தனக்கு திருமணம் செய்ய பெண் பார்க்குமாறு தனது தாயிடம் கூறும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது..!
இந்த பறந்து விரிந்த உலகில் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு மூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அது, நகைச்சுவையாகவும் இருக்கலாம்; அல்லது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வுகளாவும் இருக்கலாம். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் (Social Media) மூலம் நம்மிடம் வந்து சேர்கிறது. அந்தவகையில், 6 வயது சிறுவன் ஒருவன் தனக்கு திருமணம் செய்ய பெண் பார்க்குமாறு கூறியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், 6 வயது குழந்தை கேட்டால் உங்களுக்கு கண்டிப்பாக அடக்கமுடியாத அளவுக்கு சிரிப்பு வரும். இந்த வீடியோவை முன்னாள் கடற்படை அதிகாரி ஹரிந்தர் சிங் சிக்கா (Former Navy Officer) தனது ட்விட்டர் பக்கக்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டும் இன்றி இந்த வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) அவர்களுக்கும் டேக் செய்துள்ளார்.
அந்த வீடியோவுடன் அவர் குறிப்பிட்டுள்ளதாவது., "இந்த இளம் பாண்டே ஜி-க்கு ஆறு வயது. இவர் மிகவும் புத்திசாலி, அழகானவர், நல்லவர், அறிவாளி, ஆனால் நிச்சயமாக #பப்பு அல்ல. ஸ்மார்ட் போன்கள் அவரது பொம்மைகள். அவரது வாதங்கள் தர்க்கங்களை அடிப்படையாகக் கொண்டவை. அவர் பொருத்தமான வாழ்க்கைத்துணையை தேடுகிறார். @narendramodi திருமண வயது கோரிக்கையில் புதிய மாற்றம் விரைவில் உங்கள் கதவைத் தட்டக்கூடும்?" என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | Watch Video: Tech-ன் உதவியால் தாயாகி குழந்தைக்கு பாலூட்டிய தந்தை, வைரலாகும் Video
அந்த வீடியோவில், மூன்று பேர் கொண்ட குடும்பம் இருப்பதாக சிறுவன் கூறுகிறான். திருமணத்திற்குப் பிறகு நான்கு பேர் ஆகிவிடுவார்கள். எனவே, என்னுடன் Hide & Seek விளையாட ஒருவர் இருப்பார். ஆனால், தற்போது குடும்பத்தில் வேறு எந்த உறுப்பினரும் இல்லாததால் விளையாட முடியவில்லை" என சிறுவன் கூறிய அனைத்தையும் அவரது அம்மா தொலைபேசியில் எல்லாவற்றையும் பதிவு செய்தாள். பின்னர் அவர் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். தாயும் குழந்தையின் அப்பாவித்தனத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டே, தொடர்ந்து கேள்விகள் மூலம் மனதில் இருப்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறாள். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
முதலில், சிறுவர்கள் என்னுடன் விளையாட யாரும் இல்லை, எனக்கு ஒரு தம்பி பாப்பா வானும் என்ற காலம் போய், என்னுடன் கண்ணாம்பூசி விளையாட எனக்கு ஒரு பெண்ணை பாருங்கள் நான் திருமணம் செய்து கொள்கிறேன் என்ற நிலைமை வந்துவிட்டது.
உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR