Watch Video: Tech-ன் உதவியால் தாயாகி குழந்தைக்கு பாலூட்டிய தந்தை, வைரலாகும் Video

டேப்லெட்டின் திரையில் குழந்தையின் தாயின் படம் உள்ளது. அதைப் பார்த்தபின் குழந்தை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பால் குடிக்கிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 6, 2021, 04:00 PM IST
  • தனது குழந்தைக்கு பால் கொடுக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்திய தந்தை.
  • அன்பான தந்தையை பாராட்டும் இணையவாசிகள்.
  • வைரல் ஆனது இந்த தந்தையின் வீடியோ.
Watch Video: Tech-ன் உதவியால் தாயாகி குழந்தைக்கு பாலூட்டிய தந்தை, வைரலாகும் Video title=

புதுடெல்லி: தொழில்நுட்பம் நம் வாழ்வில் பல விதங்களில் உதவி வரும் இந்த வெளையில், நமது பலவிதமான பிரச்சனைகளை அது தீர்த்து வைக்கிறது. பல ஏமாற்று வேளைகளுக்கும் தொழில்நுட்பம் உதவத்தான் செய்கிறது. ஆனால் சில ஏமாற்று வேலைகள் நல்ல விஷயங்களுக்கு பயன்படுகின்றன.

ஒரு தந்தையின் 'டெக் ஏமாற்று வீடியோ' சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ சீனாவைச் (China) சேர்ந்தது என கூறப்படுகிறது. அதில் ஒருவர் தனது குழந்தைக்கு ஒரு பாட்டிலிலிருந்து பால் கொடுப்பதைக் காண முடிகிறது.

ஆனால் அவர் தனது குழந்தைக்கு பாலை அளிக்கும் வழியைப் பார்த்து, இணையத்தில் பொதுமக்கள் இந்த தந்தையின் ரசிகர்களாகிவிட்டனர்.

இந்த தந்தையை இணையவாசிகள் (Netizens) அனைவரும் பாராட்டியுள்ளனர். தாய் இல்லாத நேரத்தில் குழந்தைக்கு அமைதியாக பாலை அளிக்க அவர் எடுத்துக்கொண்ட இந்த முயற்சி உண்மையிலேயே மதிப்புக்குரியது என்று மக்கள் கூறுகிறார்கள்.

ALSO READ: தனது DSP மக்களுக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் தந்தை; வைரல் புகைப்படம் இதோ!

சீன தந்தையின் வீடியோ வைரலாகியது

இந்த வைரல் வீடியோவில் (Viral Video), தந்தை முகமூடி போல முகத்தில் டேப்லெட் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. டேப்லெட்டின் திரையில் குழந்தையின் தாயின் படம் உள்ளது. அதைப் பார்த்தபின் குழந்தை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் பால் குடிக்கிறது. தனது தாயே தனக்கு பால் கொடுப்பது போன்ற உணர்வு அக்குழந்தைக்கு ஏற்படுகிறது.

இந்த வீடியோ முதலில் சீனாவின் சமூக ஊடக தளமான Weibo-வில் பகிரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செயல்கள் இதற்கு முன்னரும் செய்யப்பட்டுள்ளன

இந்த வைரல் வீடியோவைப் பார்த்து, அனைவரும் இந்த தந்தையை புகழ்ந்து பேசுகிறார்கள். இந்த வீடியோவும் மிகவும் உணர்ச்சிவசப் படுத்தும் வகையில் உள்ளது.  குழந்தைக்கு பால் கொடுக்க இப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்த முதல் தந்தை இவர்தான் என்றல்ல. இதற்கு முன்னரும், பலர் பல விதங்களில், வித்தியாசமாக யோசித்து, இப்படிப்பட்ட சாதுர்யமான செயல்களை செய்துள்ளார்கள்.

பிரேசிலில் (Brazil) ஒருவர் தனது அப்பாவி குழந்தைக்கு உணவளிக்க தனது குழந்தைக்கு பால் கொடுக்க குழந்தையின் தாயின் படத்தை தன் முகத்தில் ஒட்டிக்கொண்டார். பின்னர் குழந்தையின் தாயைப் போல உள்ளாடை அணிந்து குழந்தைக்கு பாட்டிலில் இருந்து பால் கொடுத்தார். தன் தாயே பால் கொடுப்பது போல குழந்தைக்கு தோன்ற, அக்குழந்தை நிம்மதியாக பாலை குடித்தது. 

ALSO READ: Watch: பாகிஸ்தானில் தீ வைத்து தகர்த்தப்பட்ட இந்து கோயில், கொதித்தெழிந்த Netizens!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News