தங்க நகை இடுப்புக்கு கீழே அணியக்கூடாது, என் தெரியுமா?
Gold Wearing Tradition : தங்க நகைகள் பொதுவாக இடுப்புக்கு மேலேயும், வெள்ளி நகைகள் இடுப்புக்கு கீழேயும் அணிவது ஏன்? என என்றாவது யோசித்திருக்கிறீர்களா? உங்கள் கேள்விக்கான பதில் இங்கே.
Gold Tradition Tamil : தங்கம், வெள்ளி நகைகளை அணிவதில் பொதுவாகவே ஒரு வழக்கம் பின்பற்றப்படுகிறது. இடுப்புக்கு மேலே தங்க நகைகளும், இடுப்புக்கு கீழே வெள்ளி நகைகளும் அணிந்து கொள்கிறார்கள். ஆனால், அது ஏன் என என்றாவது யோசித்திருக்கிறீர்களா?. ஆன்மீகத்திலும், அறிவியல் ரீதியாகவும் ஒருசில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளன. முதலில் ஆன்மீக ரீதியாக பார்க்கும்போது தங்கம் சுக்கிரனுக்கு உகந்த அணிக்கலனாகும். இதனை அணியும்போது நேர்மறை எண்ணங்களும் இயல்பாகவே அதிகரிக்கும். தங்கம் அணியும்போது உங்களுக்குள் புதிய தன்னம்பிக்கை, உற்சாகம் எல்லாம் பிறக்கும். பொதுவாகவே ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள், சுக்கிர தோஷம் இருப்பவர்கள் தங்க நகைகளை அணிந்து கொண்டால், சுக்கிரனின் ஆசி கிடைக்கும். அதனாலேயே சுக்கிர தோஷம் இருப்பவர்கள் அதிகம் தங்க நகைகளையும் அணிந்திருப்பார்கள்.
மேலும் படிக்க | சரஸ்வதி பூஜையன்று இந்த மந்திரங்களை சொன்னால் போதும்: முட்டாளும் மேதையாகலாம்
குருவின் ஆதிக்கம் கொண்ட ஆபரணமாகவும் தங்கம் இருக்கிறது. செல்வத்துக்கு அதிபதியான குரு, தங்க நகைகளை அணியும்போது குருவின் ஆசி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. இந்த சூழலில் பாதம் என்பது சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த இடம். அதனால், குருவுக்கு உகந்த ஆபரணத்தை, அவரின் பகைவரான சனி பகவானின் ஆதிக்கம் இருக்கும் இடத்தில் அணிவது பகை அம்சத்தை உருவாக்கும். இதனால் தீய செயல்களும், எதிர்மறையான எண்ணங்களும் அதிகரிக்குமாம். அதனாலேயே இடுப்புக்கு மேலே மட்டும் தங்க நகைகள் அணிவிக்கப்படுகிறது. வெள்ளி நகைகள் இடுப்புக்கு கீழே அணிவிக்கப்படுகிறது.
தங்கம் பொதுவாக காலில் அணியும்போது பித்தம் மற்றும் வாதத்தை அதிகரிக்குமாம். அதனாலேயே முட்டி, முழங்கால் வலி எல்லாம் அதிகரித்து, பெரிய சிக்கலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனை கருத்தில் கொண்டு தான் கால் நரம்புகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்ததாத வெள்ளி ஆபரணங்களை காலில் அணியுமாறு அறிவுறுத்துகிறார்கள். வெள்ளி கொலுசு, வெள்ளி மெட்டிகளை பெண்கள் அதிகம் அணிகிறார்கள். கால் நரம்பு உஷ்ணங்களை வெள்ளி ஆபரணங்கள் நெறிப்படுத்தும் என்பது நம்பிக்கை.
மகாலட்சுமியின் ஆபரணமாக தங்கம் இருப்பதால் அதனை உயர்வான இடத்திலேயே வைக்க வேண்டும். அதற்காவே கழுத்து, கைகளில் தங்கம் அணிந்து கொள்கிறார்கள். மகாலட்சுமியும் மகழ்ச்சி அடைந்து ஆசியை கொடுப்பார். இடுப்புக் கீழே அந்த தங்கத்தை அணியும்போது அது அபச சகுணமாக பார்க்கப்பட்டு, மகாலட்சுமியின் கோபத்துக்கு ஆளாகி வாழ்க்கையில் பெரிய சரிவை சந்திக்க நேரிடும். அதனால் எப்போதும் தங்கத்தை உயர்வான மதிப்புடன் வைக்கும் பொருட்டு இடுப்பு கீழே அதனை அணிவதில்லை.
மேலும் படிக்க | திருப்பதி சொர்க்க வாசல் திறப்பு எப்போது? தேதியை குறிச்சு வச்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ