Lifestyle Tips Tamil Latest : மழைக்காலம் நடப்பதால் இப்போது எங்கு பார்த்தாலும் கொசு அதிகளவில் மொய்த்துக் கொண்டிருக்கிறது. எல்லா இடத்திலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் கொசு, மக்களை சரமாரியாக கடிக்கிறது. எல்லா கதவுகளும் அடைக்கப்பட்டு வீட்டுக்குள் இருந்தாலும் அங்கே கூட கொசு பறந்து வந்து கடிப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். ஆனால் இது ஆபத்தானது. கொசு கடி மூலம் தான் டெங்கு, மலேரியா போன்ற பெரும்பாலான மழைக்கால நோய்கள் பரவுகின்றன. இதனை தடுக்கவில்லை என்றால் பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். கொசுக்கடியில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்ள நீங்கள் முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதேநேரத்தில் கொசு குறிப்பிட்ட நபர்களை மட்டும் தேடி கடிக்கும் என்பதை பற்றி அறிந்திருக்கிறீர்களா?. உங்களுக்கு வியப்பாக இருக்கலாம், ஆனால் உண்மை. குறிப்பிட்ட ரத்த வகை உள்ளவர்களை கொசு அதிகம் கடிக்கும் என நிபுணர்கள் கூறியுள்ளனர். அதாவது, ஓ பாசிடிவ் ரத்த வகை உள்ளவர்கள் அதிகம் கொசு கடிக்கு ஆளாவர்களாம். ஏனெனில் இந்த இரத்தக் குழுவைக் கொண்டவர்களின் வளர்சிதை மாற்ற விகிதம் மிக அதிகமாக இருக்கும். கொசுக்களின் வளர்ச்சிக்கும் இந்த ரத்தம் தேவைப்படுகிறது.


மேலும், இரவில் தூங்கும் போது கொசுக்கள் அதிகமாக கடிப்பதன் பின்னணியிலும் சில காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் இந்த நேரத்தில் மனிதர்கள் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறார்கள். கார்பன் டை ஆக்சைட்டின் வாசனை கொசுக்களை வேகமாக ஈர்க்கிறது. லாக்டிக் அமிலம், யூரிக் அமிலம் மற்றும் அம்மோனியா ஆகியவற்றால் கொசுக்கள் ஈர்க்கப்படுகின்றன. கருப்பு, நீலம் மற்றும் அடர் நீலம் போன்ற அடர் நிற ஆடைகளை அணியும் நபர்களையும் கொசுக்கள் அதிகம் தேடி கடிக்குமாம். இந்த கலர்கள் அதிகம் கொசுக்களை ஈர்க்கும் திறன் கொண்டவையாம். அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுபவர்கள், வாசனைக்காக உடலில் பர்ப்யூம் அடிப்பவர்கள், துர்நாற்றம் வீசக்கூடியவர்களை எல்லாம் கொசுக்கள் அதிகம் கடிக்குமாம். 


மேலும் படிக்க | எருமை பால் vs மாட்டு பால் : குழந்தைகளுக்கு கொடுக்க இரண்டில் எது சிறந்தது?


கொசு கடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 


முழு கை ஆடைகளை அணிவது மூலம் கொசு கடிப்பதைத் தடுக்கலாம், குறிப்பாக பூங்கா போன்ற திறந்தவெளியில் அல்லது வெளியில் எங்கும் இருக்கும்போது. இந்த வகை ஆடைகளை அணிய வேண்டும். மழைக்காலத்தில் உங்களை சுற்றியிருக்கும் இடங்களில் தண்ணீர் தேங்குவதை அனுமதிக்காதீர்கள். அப்படி இருந்தால் அந்த இடத்தை உடனே சுத்தம் செய்ய வேண்டும். உங்கள் வீட்டில் பிரிட்ஜ் இருந்தால், அவ்வப்போது குளிரூட்டியை சுத்தம் செய்யுங்கள். கொசுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க, பிரிட்ஜ் தண்ணீரை மாற்ற வேண்டும். 


கொசு விரட்டி கிரீம்கள் சந்தையில் கிடைக்கின்றன, அவற்றை நீங்கள் தடவிக் கொண்டு வெளியே செல்லலாம். அத்துடன் கிரீம்களை நீங்களே வாங்குவதற்குப் பதிலாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தவும்.


கொசு கடித்தால் என்ன செய்வது?


நோய் எதிர்ப்பு சக்தியை கவனித்துக் கொள்ளுங்கள் - இதற்காக, பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் நட்ஸ் சாப்பிடுங்கள். மிக முக்கியமாக, நீங்கள் எதைச் சாப்பிட்டாலும், அதைச் சமைத்து, சுத்தம் செய்து கழுவிச் சாப்பிடுங்கள்.


இஞ்சி, கருப்பு மிளகு, கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் துளசி இலைகளை கலந்து, நன்கு கொதிக்க வைத்து தேநீர் தயாரித்து அதனை தொடர்ந்து சில நாட்கள் தினமும் 1 கப் குடிக்கவும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள். 


மேலும் படிக்க | மின்சார கட்டணம் அதிகம் வருகிறதா? குறைக்க எளிய வழிகள் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ